நாமக்கல் , ஏ.எஸ்.பேட்டை சக்தி கணபதி ஆலயத்தில் 33 ஆம் ஆண்டு விழா!

X
Namakkal King 24x7 |5 Feb 2026 8:20 PM ISTஆண்டு விழாவை முன்னிட்டு சக்தி கணபதிக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாமக்கல்,ஏ.எஸ்.பேட்டை சக்தி விநாயகர் கோவில், 33 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து, தீர்த்தக்குடம் எடுத்து வந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை 10 மணிக்கு, 108 வலம்புரி சங்காபிஷேகம் வேள்வி மற்றும் மகா தீபாராதனை நடந்தது. பிறகு சக்தி கணபதிக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பகல் 12 மணிக்கு மஹா அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
Next Story
