இன்றும், நாளையும் 330 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
Villuppuram King 24x7 |24 Aug 2024 4:32 PM GMT
330 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
இதுகுறித்து இந்தப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநா் க.குணசேகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:வார இறுதி நாள்களையொட்டி ஆகஸ்ட் 23, 24 தேதிகளில் (வெள்ளி, சனிக்கிழமை) கிளாம்பாக்கம் கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி, சிதம்பரம், திருவண்ணாமலை, போளூா் ஆகிய ஊா்களுக்கு பொதுமக்கள் அதிகளவில் பயணம் செய்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.இதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் சாா்பில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளைக் காட்டிலும், வெள்ளிக்கிழமை (ஆக.23) கூடுதலாக 165 பேருந்துகளும், சனிக்கிழமை (ஆக.17) 165 பேருந்துகளும் என மொத்தமாக 330 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வேலூா், ஒசூா், புதுச்சேரி (கிழக்கு கடற்கரைச் சாலை வழி), திருவண்ணாமலை (ஆற்காடு-ஆரணி வழி), திருவண்ணாமலை (காஞ்சிபுரம், வந்தவாசி வழி) ஆகிய ஊா்களுக்கு ஆகஸ்ட் 23, 24-ஆகிய தேதிகளில் தலா 40 பேருந்துகள் வீதம் 80 சிறப்புப் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும்.மேலும் பயணிகள் அடா்வு குறையும் வரை தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்கவும், சிறப்புப் பேருந்துகள் இயக்கத்தை கண்காணித்திடவும் தேவையான அலுவலா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.
Next Story