மாவட்டம் முழுவதும் விதிகளை மீறிய வாகனங்கள் மீது 3.32 லட்ச ரூபாய் அபராதம்

X
வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக டிசம்பர் 8 மற்றும் 9ஆம் தேதி சிவகங்கை நகர், நாட்டரசன் கோட்டை, திருப்பத்தூர் ரோடு, காரைக்குடி மற்றும் தேவகோட்டை பகுதியில் சிறப்பு வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 340 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு விதிகளை மீறிய வாகனங்கள் மீது மொத்தம் 3,32,000 வசூல் செய்யப்பட்டுள்ளது.
இதில் சரக்கு வாகனங்கள் 6, ஆட்டோ ரிக்சா 4, தனியார் பணியாளர் வாகனம் 1 என மொத்தம் 11 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக. ஆர்டிஓ மூக்கன் தெரிவித்துள்ளார். உடன் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம், விஜயகுமார் ஆகியோர் பணியினை மேற்கொண்டனர்
Tags
Next Story
