மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 33,410 பேருக்கு அடையாள அட்டை வழங்கல்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை
நிறைந்தது மனம் நிகழ்ச்சியில், வாழ்வில் ஒளிவிளக்கேற்றிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு மாற்றுத்திறனாளிகள் நன்றி தெரிவித்தனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.  மேலும், இது குறித்து அவர் தெரிவித்ததாவது,  'ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்' என்ற பேரறிஞர் அண்ணாவின் தத்துவத்திற்கேற்ப, ஏழை எளியோர் நலன் காப்பதில் எல்லாருக்கும் எல்லாம் என்ற இலக்கின்படி, தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியாவிற்கே முன்னோடியாக நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்றால் மிகையல்ல. தஞ்சாவூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இதுநாள் வரை மொத்தம் 33,410 நபர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதில் 33,027 பயனாளிகளுக்கு (98 சதவீதம்) தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 7,163 பயனாளிகளுக்கு, மனவளர்ச்சி குன்றியோருக்கான பராமரிப்பு உதவித்தொகையும், கடுமையாக கை, கால் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 962 பயனாளிகள், தசைசிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட 199 நபர்களுக்கும், 314 தொழுநோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கான பராமரிப்பு உதவித்தொகையும், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித் தொகை திட்டத்தின் கீழ் 70 நபர்களும் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில் 8,708 நபர்களுக்கு மாதம் 2000 ரூபாய் வீதம் 12 மாதத்திற்கு 208,992,000 (ரூபாய் இருபது கோடியே எண்பத்தி இரண்டு லட்சம்) பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. மேலும், அரசு காது கேளாதோருக்கான மேல்நிலைப் பள்ளியும், அரசு பார்வையற்றோர் மேல்நிலைப் பள்ளியும் இயங்கி வருகிறது.  மேலும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் முலம் 09 மனவளர்ச்சி குன்றிய குழங்தைகளுக்கான சிறப்புப் பள்ளிகளுக்கு உணவூட்டு மானியமாக 67,20,158/- (அறுபத்தி ஏழு லட்சத்து இருபதாயிரத்து நூற்றி ஐம்பத்தி எட்டு மட்டும்), மற்றும் சிறப்பாசிரியர்களுக்கான ஊதிய 27 நபர்களுக்கு ரூ.90,72,000 (தொண்ணூறு லட்சத்து எழுபத்தி இரண்டாயிரம் மட்டும்) மற்றும் 2 காது கேளாதோருக்கான சிறப்புப் பள்ளிகளும், கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்காக 02 அரசு உதவி பெறும் பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது. குழந்தைகளின் குறைபாட்டினை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக காது கேளாத (EIC HI) மனவளர்ச்சி குன்றிய (EIC MR), ஆட்டிசம் (EIC AUTISM) பாதித்த குழந்தைகளுக்கு ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் வருடந்தோறும் ரூ.33 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பில் சிறப்பாசிரியர்களுக்கு ஊதிய மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மனநலம் பாதிக்கபட்டோரை பாதுகாக்கும் இல்லங்களுக்கு ரூ.24,29,600 /-(இருபத்தி நான்கு லட்சத்து இருபத்தி ஒன்பதாயிரத்து அறநூறு மட்டும்) மதிப்பில் வழங்கப்பட்டு வருகிறது. தசைசிதைவு நோயினால் பாதிக்கப்பட்டோருக்கான பகல்நேர பராமரிப்பு மையங்களுக்கு ரூ.24 லட்சத்து 96 ஆயிரத்து 500 மதிப்பில் வழங்கப்பட்டு வருகிறது. 2021-2022 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 3206 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10,51,60,820 (ரூபாய் பத்து கோடியே ஐம்பத்தொரு லட்சத்து அறுபதாயிரத்து எண்ணூற்று இருபது) மதிப்பிலான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. வங்கிக்கடன் மான்யதிட்டம் மானிய தொகையாக 25,000/- மற்றும் பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டம், வேலையில்லா படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், கல்வி உதவித்தொகை திட்டம் வாசிப்பாள் உதவித்தொகை திட்டம், தெருமுனை பிராச்சாரம் போன்ற திட்டங்களுக்கு ரூ.1,00,45,800 (ரூபாய் ஒரு கோடியே நாற்பத்து ஐந்தாயிரத்து எண்ணூறு) மதிப்பிலான திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 5 வகையான திருமண உதவித்தொகை திட்டங்கள் 68,50,000/- (ரூபாய் அறுபத்து எட்டு லட்சத்து ஐம்பதாயிரம்) மதிப்பில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. கும்பகோணம், பட்டுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் (Sub Divisional Level) வருவாய் கோட்ட அளவில் மற்றும் வட்டார அளவில் ஒருங்கிணைந்த சேவை மையங்கள் (One Stop Centres) அமைக்கப்பட உள்ளது.  மேலும் சமுக தரவு கணக்கெடுப்பு மூலம் 3 ஆயிரம் புதிய மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை(UDID) வழங்கப்பட்டது" எனத் தெரிவித்தார்  தஞ்சாவூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். பயனாளி  கீதா தெரிவித்ததாவது. "எனது பெயர் கீதா. நான் தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலத்தில் வசித்து வருகிறேன். எனக்கு திருமணம் ஆகவில்லை. எனது சகோதரிகளின் உதவியுடன் தான் வாழ்ந்து வருகிறேன். பொதுபோக்குவரத்திற்கு சென்று வர மிகவும் சிரமமாக இருந்தது.  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உன்னத திட்டமான மக்களுடன் முதல்வர் முகாமில் பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி விண்ணப்பம் அளித்திருந்தேன். அந்த விண்ணப்பத்தினை உடனடியாக பரிசீலனை செய்து மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் எனக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கியதால் நான் தன்னிச்சையாக எல்லா இடங்களுக்கும் சென்று வர உதவியாக இருக்கிறது. இத்திட்டத்தை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். பயனாளி அசோகன் தெரிவித்ததாவது. எனது பெயர் அசோகன், கார்த்திகை தோட்டம், பாபநாசம் பகுதியில் வசித்து வருகிறேன். எனது பெற்றோர் கூலி வேலை செய்து என்னையும், எனது மனைவியையும் காப்பாற்றி வருகிறார்கள். விபத்தினால் எனது இரண்டு கால்கள் இழந்த நிலையில் மக்களுடன் முதல்வர் முகாமில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை அணுகி நியூமோசன் பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி விண்ணப்பித்ததைத் தொடர்ந்து,  தமிழ்நாடு முதலமைச்சர்  வழிகாட்டுதலின்படி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் உடனடியாக வழங்கப்பட்டது. இதன் மூலம், நான் வெளியில் சென்று வர மிகவும் உதவியாக இருக்கிறது. இந்த மகத்தான திட்டத்தை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.   தொகுப்பு ரெ.மதியழகன், எம்.காம்,பி.எல்., செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தஞ்சாவூர் மாவட்டம்
Next Story