கரூரில்,முதலமைச்சர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்திய 34 பேர் கைது.

கரூரில்,முதலமைச்சர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்திய 34 பேர் கைது.
கரூரில்,முதலமைச்சர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்திய 34 பேர் கைது. தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவன தலைவர் ராமதாசை குறிப்பிட்டு அவருக்கு வேறு வேலை இல்லை. அதனால் தான் நாள்தோறும் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதற்கு, பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கண்டனம் தெரிவித்தனர். மேலும், இன்று தமிழக முழுவதும் முதலமைச்சர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி, பாட்டாளி மக்கள் கட்சியினர் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக கரூர் பேருந்து நிலையம் அருகே பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் பி எம் கே பாஸ்கரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் தமிழ்மணி, கரூர் நகர செயலாளர் ராக்கி முருகேசன், கட்சி நிர்வாகிகள் முத்து, விஸ்வநாதன், ரமேஷ், மூர்த்தி, குமரேசன், மாகாளி, முருகன், பழனிச்சாமி, தங்கவேல், முத்துகிருஷ்ணன், உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 34 பேரை காவல்துறையினர் கைது செய்து கரூரில் உள்ள காவேரி திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
Next Story