வருவாய் ஆய்வாளர் 34 பேர் பணி இடமாற்றம்

வருவாய் ஆய்வாளர் 34 பேர் பணி இடமாற்றம்
X
வருவாய் ஆய்வாளர் 34 பேர் பணி இடமாற்றம்
விழுப்புரம் மாவட்டம், குறுவட்ட வருவாய் ஆய்வாளர்கள் மேல்மலையனுார் அரிகிருஷ்ணன், சத்தாம்பாடி நேரு ஆகியோர் திண்டிவனம் கோட்ட கலால் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.விக்கிரவாண்டி தெய்வீகன் விழுப்புரம் கோட்ட கலால் அலுவலகத்திற்கும், விழுப்புரம் ராபர்ட் கோட்ட கலால் அலுவலகத்திற்கும், ராணிபவானி விழுப்புரம் முத்திரைத்தாள் தனி தாசில்தார் அலுவலகத்திற்கும், கிளியனுார் ரமேஷ் வானுார் தாசில்தார் அலுவலகத்திற்கும் உட்பட மாவட்டத்தில் 34 வருவாய் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதற்கான உத்தரவை மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ் பிறப்பித்துள்ளார்.
Next Story