அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 34 கிலோ குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த இரண்டு நபர்களை கைது

அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 34 கிலோ குட்கா  பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த இரண்டு நபர்களை கைது
X
தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த நபர்களை கைது செய்து வரும் மாவட்ட காவல் துறையினர்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு கடைகளில் தனிப்படையினர் நடத்திய சோதனையில் துங்கபுரம் கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி (58) த/பெ பாண்டுரங்கன், மேற்கு தெரு, துங்கபுரம் , குன்னம் வட்டம், பெரம்பலூர் மாவட்டம். என்பவர் தனக்கு சொந்தமான பெட்டிக் கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்றது தெரிய வந்த நிலையில் தனிப்படையினர் மற்றும் அவரது குழுவினர் மேற்படி எதிரியை கைது செய்து வழக்குப்பதிவு செய்து அவரிடமிருந்து .ஹான்ஸ் 810 பாக்கெட்( 16 kg), 2.விமல் பாக்கு 1325 பாக்கெட் ( 3 kg), என மொத்தம் – 19 கிலோகிராம் எடையுள்ள 29,700 ரூபாய் மதிப்புள்ள* குட்கா பொருட்களை பறிமுதல் செய்தும், வயலப்பாடி கிராமத்தில்
ராமசாமி (66) த/பெ அய்யாக்கண்ணு, வயலப்பாடி , குன்னம் வட்டம், பெரம்பலூர் மாவட்டம்.
என்பவர் தனக்கு சொந்தமான பெட்டிக் கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்றது தெரிய வந்த நிலையில் மேற்படி எதிரியையும் கைது செய்து வழக்கு பதிவு செய்து அவரிடமிருந்து ஹான்ஸ் 750 பாக்கெட் 15 kg எடையுள்ள 15,000 ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்து மேற்படி எதிகள் இருவரையும் குன்னம் காவல்நிலைய காவல்துறையினர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story