அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலை - 34 பேர் மீது வழக்கு பதிவு

அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலை - 34 பேர் மீது வழக்கு பதிவு
X
திண்டுக்கல்லில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலை - 34 பேர் மீது வழக்கு பதிவு
திண்டுக்கல் பாறைப்பட்டி காளியம்மன் கோவில் முன்பு விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தவோ ஊர்வலமாக செல்லவோ அனுமதி கிடையாது என போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இதை மீறி இந்து முன்னணியினர் பாறைப்பட்டி காளியம்மன் கோவில் முன்பு விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தி ஊர்வலமாக எடுத்து செல்ல முயற்சி செய்தபோது போலீசாரும், வருவாய்த்துறையினரும் விநாயகர் சிலையை கைப்பற்றி வாகனத்தில் ஏற்றி கோட்டை குளத்தில் உள்ள தொட்டியில் கரைத்தனர். இதைத்தொடர்ந்து அனுமதியில்லாமல் சிலை வைத்ததால் இந்து முன்னணி நகரச் செயலாளர் ஞானசுந்தரம் உள்ளிட்ட 34 பேர் மீது நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story