தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் 34-வது பொதுக்குழு கூட்டம் அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு.
NAMAKKAL KING 24X7 B |7 Dec 2025 10:11 PM ISTபழைய கனரக வாகனங்களுக்கு தகுதிச் சான்றுகள் புதுப்பிக்கும் கட்டண உயர்வில் விலக்கு அளிப்பது குறித்து முதலமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் உறுதி.
வரும் 9 ம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தை லாரி உரிமையாளர்கள் தள்ளி வைக்க வேண்டும்.தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் 34 வது பொதுக்குழு கூட்டம் மற்றும் 2025-2028 ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.அதன்படி புதிய தலைவராக தன்ராஜ், செயலாளர் சாத்தையா, பொருளாராக நந்தகோபால் உட்பட மண்டல துணைத் தலைவர்கள், மண்டல இணைச் செயலாளர்கள் ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர். இந்த விழாவில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் நாமக்கல் எம்.எல்.ஏ ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.இதனையடுத்து தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுகையில் :- தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தினர் 3 கோரிக்கைகளை தெரிவித்துள்ளனர், அதன்படி 15 ஆண்டுகளுக்கு மேல் உள்ள பழைய கனரக வாகனங்களுக்கு தகுதிச் சான்றுகள் புதுப்பிக்கும் கட்டணம் ஒவ்வொரு வாகனங்களுக்கும் ஏற்ப மத்திய அரசு பலமடங்கு உயர்த்தியுள்ளது இந்த கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளிப்பதும், ஆன்லைன் வழக்குகள் போடுவதை வரைமுறை படுத்த வேண்டும் மேலும் அஞ்சல் மூலம் தகுதிச் சான்றுகள் அனுப்பி வந்த நிலையில் பழைய முறைப்படி அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பெற்றுக்கொள்வது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள், தமிழக முதல்வரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் வரும் 9 ம் தேதி அறிவித்த வேலை நிறுத்த போராட்டத்தை தள்ளி வைக்க வேண்டும், அதற்குள் லாரி உரிமையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்.15 ஆண்டுகளுக்கு மேல் தகுதியாக இருக்கும் கனரக வாகனங்களை இயக்கலாம் என்பது தான் நமது விருப்பம் ஆனால் மத்திய அரசு அதிகார பலத்தை பயன்படுத்தி இத்தகைய செயலில் ஈடுப்பட்டு வருவதை எதிர்த்து போராட வேண்டிய நிலை உள்ளது என அமைச்சர் சிவசங்கர் பேட்டி அளித்தார்
Next Story



