நிலத்தில் மண் அள்ளியதாக 34 லட்சத்து 54 ஆயிரம் அபராதம் விதித்த கோட்டாட்ச்சியர் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுக்கா திருமலைப்பட்டி கிராமத்தை சேர்ந்த தங்கவேல் மகன் தினேஷ்குமார் (25). பொறியியல் பட்டதாரி. பெற்றோரை இழந்த இவர் தெலுங்கா மாநிலத்தில் பணி தொடர்பாக பயிற்சியில் உள்ளார். இவருக்கு கடந்த 2025 ஜுன் மாதம் வருவாய் கோட்டாட்ச்சியர் அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். அதனை தொடர்ந்து தினேஷ்குமார் நிலத்தில் மண் எடுத்த கூறி அபராதமாக 34 லட்சத்து 54 ஆயிரம் கட்டவேண்டும் என கனிமவளத்துறை மற்றும் நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இதே போல அதே பகுதியில் உள்ள பலருக்கு அபராதம் விதிக்கப்பட்டுளதாக கூறப்படுகின்றன. இந்நிலையில் தினேஷ்குமார் கலெக்டர் அலுவலகத்தில் மண் அள்ளியது தொடர்பாக தமக்கு சம்மந்தமே இல்லாத அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பி உள்ளது அதிர்ச்சியாக உள்ளது.u எனவே தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
