கரூர் மாவட்டத்தில் 34.30 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவிப்பு.

கரூர் மாவட்டத்தில் 34.30 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவிப்பு.
கரூர் மாவட்டத்தில் 34.30 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவிப்பு. தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதேபோல லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளிலும் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் ரெடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று 22 மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்டத்தில் நேற்று பரவலாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது. பெய்த மழை குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அணைப்பாளையத்தில் 2.00-மில்லி மீட்டர், க.பரமத்தில் 3.20 மில்லி மீட்டர், குளித்தலையில் 2.20 மில்லி மீட்டர், தோகை மலையில் 4.40 மில்லி மீட்டர், கிருஷ்ணராயபுரத்தில் 5.50 மில்லி மீட்டர், மாயனூரில் 6.00-மில்லி மீட்டர், பாலவிடுதியில் 5.00 மில்லி மீட்டர், மைலம்பட்டியில் 6.00 மில்லி மீட்டர் என மொத்தம் 34.30 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இதனுடைய சராசரி அளவு 2.86 மில்லி மீட்டர் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
Next Story