திருச்செங்கோடு நகராட்சியில் தூய்மை பணியாளர் உள்ளிட்ட 348 பேருக்கு காலை உணவு திட்டம் எம்எல்ஏ ஈஸ்வரன் தொடங்கி வைத்தார்
Tiruchengode King 24x7 |9 Feb 2026 7:27 PM ISTதிருச்செங்கோடு நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள்மற்றும் ஓட்டுநர்கள் tbc பணியாளர்கள் என 348 பேருக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை எம்எல்ஏ ஈஸ்வரன் தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு கலந்து கொண்டார்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள 348 தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நிகழ்ச்சியை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார். திருச்செங்கோடு வேலூர் ரோடு கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், நகர்மன்றத் தலைவர் நளினி சுரேஷ்பாபு, நகராட்சி ஆணையாளர் வாசுதேவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் தமிழக முழுவதும் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டு தற்போது அது விரிவாக்கம் செய்யப் பட்டுள்ளது. அதன்படி திருச்செங்கோடு நகராட்சியில் 348 தூய்மை பணியாளர்கள், டிபிசி பணியாளர்கள்,ஓட்டுனர்கள் ஆகியோருக்கும் காலைஉணவு திட்டம் விரிவாக்கம் செய்து வழங்கப்பட உள்ளது இதற்கான துவக்க விழா நிகழ்ச்சி வேலூர் ரோடு கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காணொளிக் கட்சி மூலமாக தொடங்கி வைத்த நிகழ்ச்சியை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன்நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பரமத்தி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு,நகராட்சி ஆணையாளர் வாசுதேவன்ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் நகர் மன்ற தலைவர் மேற்கு நகர திமுக செயலாளர் நடேசன், நகர்மன்ற துணைத் தலைவர்கிழக்கு நகர திமுக செயலாளர் கார்த்திகேயன், நகர் மன்ற உறுப்பினர்கள் மகேஸ்வரி, சம்பூர்ணம், சினேகாஹரிஹரன், செல்லம்மாள் தேவராஜன், செல்வி ராஜவேல், அசோக்குமார், மனோன்மணி சரவணன் முருகன்,எஸ் ரமேஷ் திவ்யா வெங்கடேஸ்வரன் முருகேசன், அண்ணாமலை, ராஜா,நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்டசெயலாளர் ராயல் செந்தில், இணை செயலாளர் லாவண்யா ரவி அமைப்பு செயலாளர் நந்தகுமார் நகரச் செயலாளர் சேன்யோகுமார்,விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் வெற்றி செந்தில்,ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் கூறியதாவது திருச்செங்கோட்டிலஅதிகமான வாக்குகளை வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி பெறுகிறது என்றால் அதற்கு முழு காரணமாக இருப்பவர்கள் தூய்மை பணியாளர்கள் தான் தூய்மை காவலர்களான நீங்கள் செய்யும் பணியாள்தான் நகர் மன்றம் சிறப்பு நிலை நகராட்சி என்கிற உயரத்தை எட்டி இருக்கிறது.முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் 14 முறை தான் பேசியுள்ளார்.உங்களால் தேர்ந்தெடுக்கப் பட்டு தமிழக சட்டமன்றத்திற்குஅனுப்பப்பட்ட நான் 165 முறைகளுக்கு மேல் பேசி திருச்செங்கோட்டிற்குவாரச்சந்தை தினசரி சந்தை அறிவுசார் மையம் ஏரிக்கரைகள் பலப்படுத்துதல் அம்மன் குளம் மலை அடி குட்டை கரைகள் சீரமைத்தல்உள்கட்டமைப்புச் சாலைகள் கிராமப்புற பாலங்கள் என பல்வேறு திட்டங்களை பெற்று வந்துள்ளேன் கட்டிடங்கள் கட்டுவதுமட்டும் பணி அல்ல மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது முழுமையான பணி என்ற நோக்கில் பல்வேறு நிறுவனங்களை திருச்செங்கோடு தொகுதிக்குள் கொண்டுவர முயற்சிகள் செய்து வருகிறேன்.திருச்செங்கோடு நகராட்சியை சிறப்பு நிலை நகராட்சியாக கடுமையாக உழைத்து இந்த நிலையை அடைந்திருக்கிறார்கள் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவது தான் எங்கள் அடுத்த இலக்கு.பல்வேறு கிராமப்புற பகுதிகளுக்கு விடியல் பயன பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது இதன் மூலம் கிராமப்புற பெண்கள் பலனடைந்து வருகின்றனர்நகரில் தேங்கியுள்ள அனைத்து குப்பைகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனக் கூறினார்.
Next Story


