சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர்கள் சங்கத்தின் 35 வது மாநாடு
Sholavandan King 24x7 |26 July 2024 12:48 PM GMT
சிறுநீரக அறுவை சிகிச்சையின் போது கையாளப்படும் நவீன தொழில்நுட்ப முறைகள், சிறுநீரக அறுவை சிகிச்சை குறித்து ஆராய்ச்சி கட்டுரைகள்
தென்னிந்திய சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர்கள் சங்கத்தின் 35 வது மாநாடு மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தனியார் மஹாலில் மதுரை சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர்களின் அறக்கட்டளை சார்பாக நடைபெற்றது.இந்த மாநாட்டில் அமைப்புதலைவர் பேராசிரியர் ஞானசேகரன், அமைப்புசெயலாளர் பால் வின்சென்ட் அமைப்புபொருளாளர் ராஜிவ் அல்யப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர். மருத்துவர் பி சி ராய் விருது பெற்ற பேராசிரியர் கணேஷ் கோபாலகிருஷ்ணன் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். மேலும் மருத்துவர்கள் லலித், உத்தம்மீட்டே , சுனில்குமார், சூரிய பிரகாஷ் உட்பட தென்னிந்தியாவிலிருந்து சிறுநீரக மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.மேலும் இந்த மாநாட்டில் சிறுநீரக அறுவை சிகிச்சையின் போது கையாளப்படும் நவீன தொழில்நுட்ப முறைகள், சிறுநீரக அறுவை சிகிச்சை குறித்து ஆராய்ச்சி கட்டுரைகள் செயற்கை நுண்ணறிவு மற்றும் துறை சார்ந்த சொற்பொழிவுகள் நடைபெற்றது.
Next Story