வரவணையில்- ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.

வரவணையில்- ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.
வரவணையில்- ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடவூர் தாலுகா, வரவனை கிராமத்தில் உள்ள காணியாளம்பட்டி தனியார் திருமண மண்டபத்தில் இன்று மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி, பல்வேறு அரசு துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள், பயனாளிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்கனவே பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் பேரில், பயனளிகளுக்கு இன்று நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் வருவாய் துறை சார்பில் வீட்டுமனை பட்டா, ஆதிதிராவிடர் இணைய வழிபட்டா, நத்தம் பட்டா மாறுதல், இணைய வழி பட்டா மாறுதல், விதவைச் சான்று, தடை இன்மைச் சான்று, உதவித்தொகை, கூட்டுறவு துறை, ஊரக வளர்ச்சி துறை, வேளாண்மை - உழவர் நலத்துறை, தோட்டக்கலை துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட துறைகளின் மூலம் மொத்தம் இன்று மட்டும் 133 பயனாளிகளுக்கு 35 லட்சத்து 18 ஆயிரத்து 805- ரூபாய் மதிப்பில் நலத்திட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல். அரசின் உதவிகளை பெற்றுக் கொண்ட பயனாளிகள் மாவட்ட ஆட்சியருக்கும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்தனர்.
Next Story