காங்கேயத்தில் புதிய நியாய விலை கடை மற்றும் புதிய நூலகம் கட்டும் பணி 35 லட்சம் மதிப்பில் அமைச்சர் தொடங்கி வைத்தார்
Kangeyam King 24x7 |6 Oct 2024 5:15 PM GMT
காங்கேயத்தில் புதிய நியாய விலை கடை மற்றும் புதிய நூலகம் கட்டும் பணி 35 லட்சம் மதிப்பில் அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்
காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாலசமுத்திரம் புதூர் மற்றும் நத்தக்காடையூர் ஊராட்சி பகுதிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் புதிய நியாய விலை கடை கட்டிடம் மற்றும் புதிய நூலகம் கட்டும் பணி என மொத்தம் ரூ. 35 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். நிகழ்வில் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல தலைவர் இல. பத்மநாதன், கூட்டுறவு சார் பதிவாளர் யமுனா, காங்கேயம் வட்டாட்சியர் மோகனன், மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணவேணி வரதராஜன், காங்கேயம் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் கருணை பிரகாஷ், கீரனூர் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Next Story