சதர்ன் ரீஜன் பல்க் எல்.பி.ஜி. டிரான்ஸ்போர்ட் ஓனர்ஸ் அசோசியேஷன் 35 வது மகாசபை கூட்டம்!

எல்பிஜி சங்கத்தின் உறுப்பினர்கள் இயற்கை மரணம் அடையும் போது சங்கத்தின் சார்பில் ரூ.50,000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது.தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா,தெலங்கானா, பாண்டிச்சேரி ஆகிய 6 மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டலங்களில் தற்போது 4800 எல்பிஜி டேங்கர் லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது. 5 ஆண்டுக்கு ஒரு முறை இந்திய ஆயில் கார்ப்பரேஷன்(IOC), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (HPC), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (BPC) ஆகிய 3 ஆயில் நிறுவனங்களுடன் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வாடகை ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டு, தென்மண்டலங்களில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பாட்டிலிங் பிளாண்டுகளுக்கு(சிலிண்டர் உற்பத்தி மையங்கள்) சமையல் எரிவாயுவை ஏற்றிச் செல்லும் பணியில் ஈடுபடுகிறார்கள்.இந்த சங்கத்தின் 35 வது மகாசபை கூட்டம் நாமக்கல்- திருச்சி சாலையில் உள்ள கோல்டன் பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் சங்கத்தின் தலைவர் சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார்.இதில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் தனராஜ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்,எல்பிஜி சங்கத்தின் செயலாளர் செந்தில்குமார் தீர்மானங்களை வாசித்தார், சங்கத்தின் பொருளாளர் அம்மையப்பன், உபத்தலைவர் பன்னீர்செல்வம், இணைச் செயலாளர் கோபி, துணைச் செயலாளர் கௌசிகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில்
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், எரிவாயு லாரிகளின் உரிமையாளர்களுக்கு, அந்த லாரிகளுக்கான வாடகைத் தொகையினை நிலுவையின்றி வழங்க வேண்டும், மேலும் நிலுவையில் உள்ள தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும்.
அனைத்து பல்க் எல்பிஜி லாரிகளுக்கும் வேலை வாய்ப்புகளை எண்ணெய் நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. எல்பிஜி சங்கத்தின் உறுப்பினர்கள் இயற்கை மரணம் அடையும் போது சங்கத்தின் சார்பில் ரூ.50,000 நிவாரணத் தொகை வழங்கப்படும்
என உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்த நிகழ்வில் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் நிர்வாகிகள் மற்றும் நாமக்கல், சேலம், பரமத்தி ஆகிய லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் நிர்வாகிகள், டிரெய்லர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் நிர்வாகிகள் மற்றும் தென் மாநிலங்களில் இருந்து ஏராளமான எல்பிஜி சங்கத்தின் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.சங்கத்தின் துணைத் தலைவர் பிரபாகரன் நன்றி கூறினார் .
Next Story