ராமநாதபுரம் நுகர் பொருள் சங்கத்தின் 35 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது

தமிழ்நாடு நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கங்களின் 35 ம் ஆண்டு கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் தமிழ்நாடு நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கங்களின் 35 வது பொதுக்குழுக்கூட்டம் ராமநாதபுரம் தனியார் மஹாலில் நடைபெற்றது. இவ்விழாவில் மாநில தலைவர் வெங்கடேஷ், மாநில பொதுசெயலாளர் ராதாகிருஷ்ணன், மாநில பொருளாளர் பழனியப்பன், மாநில செயலாளர் மோகன் சங்கர் மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வர்த்தக நிறுவனங்களில் இருந்தும் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சில்லறை வணிகர்களை பெரிதும் பாதிக்கும் வாடகை மீதான 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பை திரும்ப பெற மத்திய மாநில அரசுகளை வலியுத்துவது. வணிக வரி மற்றும் சொத்து வரியினை திரும்ப பெற வேண்டும் மேலும் வணிகர்களால் தாக்கல் செய்யப்பட்ட டி எஸ் டி நமூனாக்களை அதிகாரிகள் தணிக்கை செய்ய வசதியாக பராமரிக்கும் கால அளவை ஐந்தாண்டுகளிலிருந்து ஓராண்டாக குறைக்கும்படி ஜிஎஸ்டி கவுன்சிலை இந்த பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது எங்களுடைய லாபம் மிக குறைவாக உள்ளநிலையில் எங்களுடைய செலவினங்கள் மிகவும் அதிகம் எனவே வங்கிகள் விதிக்கும் வட்டி விகிதங்களை குறைத்து கொடுக்குமாறு ரிசர்வ் வங்கிக்கு கோரிக்கைவிடுத்து இக்கூட்டத்தினவாயிலாக கேட்டுக்கொள்ளப்பட்டது. தமிழக முழுவதும் இருந்து பல்வேறு மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகள் வணிகர்கள் கலந்து கொண்டு ஏக மனதாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
Next Story