ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 35 ஆயிரம் நிவாரணமாக வழங்கிட வேண்டும்..

ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 35 ஆயிரம் நிவாரணமாக வழங்கிட வேண்டும்..
X
திருவாரூர் மாவட்டத்தில் காலம் தப்பி பெய்த கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிற் களுக்கு, அரசு இன்சூரன்ஸ் பெற்று தர வேண்டும் மற்றும் தமிழக அரசு ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 35 ஆயிரம் நிவாரணமாக வழங்கிட வேண்டும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை.
திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஒருபோக சாகுபடி மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில் பருவம் தவறிய தொடர் கனமழையின் காரணமாக அனைத்து ஒன்றியங்களிலும் அனைத்து கிராமங்களிலும் பெருமளவில் நெற்பயிர்கள் முற்றாத நிலையில் மழை நீரில் சாய்ந்து நெற்பயிர்கள் அழுகிய நிலையில் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் முற்றிய நிலையில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களும் கீழே சாய்ந்து முளைத்து அழுகிய நிலையில் அறுவடை செய்ய இயலாத நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்பொழுது தொடர்ச்சியாக அறுவடையும் நடைபெற்று வருகிறது. அறுவடையில் ஏக்கர் ஒன்றுக்கு சராசரியாக 30 மூட்டைக்கு மேல் மகசூல் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த சூழ்நிலையில் தற்பொழுது அறுவடை மூலம் 10 மூட்டை என்ற அளவில் தான் மிக குறைவான மகசூல் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் தெளித்த உளுந்து பயிர் மழை நீரில் அழுகி சேதமடைந்து இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் அறுவடை இயந்திரத்திற்கு விவசாயிகள் ஒரு மணி நேரத்திற்கு ரூபாய் 2500 கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அறுவடை இயந்திரம், அறுவடை செய்யும் போது கூடுதல் நேரத்தை எடுத்துக் கொள்வதால் அறுவடை செய்ய கூடுதல் வாடகை செலவு ஏற்பட்டுள்ளது. இப்படி நமது மாவட்டத்தில் விவசாயிகளுக்கு நெல் மூலமும், உளுந்து பயிர் மூலமும், அறுவடை எந்திரத்தின் மூலமும் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ள நிலையில், மகசூல் இழப்பும் ஏற்பட்டுள்ளது. அறுவடை செய்வதற்கான செலவும் கூடுதலாக ஏற்பட்டு, பெருத்த நஷ்டத்தை திருவாரூர் மாவட்ட விவசாயிகள் சந்தித்துள்ளார்கள். எனவே விவசாயிகளை பாதுகாத்தி தமிழக அரசு ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 35 ஆயிரம் நிவாரணமாக வழங்கிட வேண்டும். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகள் முழுவதும் கணக்கெடுப்பு நடத்தி முறையான அறிக்கையை தமிழக அரசுக்கு அனுப்பி அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் கிடைத்திட மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதனிடம் கோரிக்கை மனு தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருவாரூர் மாவட்ட செயலாளர் எம்.சேகர் மற்றும் மாவட்ட தலைவர் எஸ்.தம்புசாமி, மாவட்டத் துணைச் செயலாளர் கே.சுப்பிரமணியன் ஆகியோர் கோரிக்கை மனுவை வழங்கினர்.
Next Story