பரமத்தி அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து ரூ.35 ஆயிரம் கொள்ளை.

X

பரமத்தி அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து ரூ.35 ஆயிரம் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை.
பரமத்தி வேலூர்,மார்ச். 21: பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே உள்ள வில்லிபாளையம் நடுத்தெருவை சேர்ந்தவர் முத்துசாமி இவரது மகன் மணிமாறன்(62). இவர் தனது குடும்பத்தினருடன் பாண்டிச்சேரி மாநிலம் காரைக்காலில் வசித்து வருகிறார். சொந்த ஊரான வில்லிபாலயத்தில் உள்ள அவரது வீட்டில் தாயார் ராசம்மாள் மட்டும் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 19 ஆம் தேதி காலை ராசம்மாள் வீட்டின் உள்ள அறையை பூட்டிவிட்டு பூட்டின் சாவியை நிலவுகால் மேற்படியில் வைத்து வைத்துவிட்டு வீட்டின் வெளிக்கதவை பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு வில்லிபாளையம் அருகே உள்ள மாரப்பன் என்பவரது தோட்டத்திற்கு வேலைக்கு சென்று விட்ட மீண்டும் மாலை 5 மணி அளவில் வீடு திரும்பியுள்ளார். வீட்டுக்கு வந்து முன் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது தான் வைத்திருந்த இடத்திலேயே சாவி இருந்ததாகவும் ஆனால் உள் அறையின் பூட்டு மாற்றி பூட்டப்பட்டிருந்ததாக சந்தேகம் அடைந்து அறையின் உள்ளே சென்று பார்த்தபோது கட்டை பையில் வைத்திருந்த ரூ.35 பணம்,அரை பவுன் கல் வைத்த மோதிரம் மற்றும் நகை திருடு போனது தெரியவந்துள்ளது. இதில் அதிர்ச்சி அடைந்த ராசம்மாள் தனது மகன் மணிமாறனுக்கு தொலைபேசியில் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணிமாறன் தனது தாயாரிடம் திருடு போனதை பற்றி விசாரித்து விட்டு சம்பவம் குறித்து பரமத்தி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரி அடிப்படையில் பரமத்தி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பட்டப் பகலில் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story