சேலம் ரெயிலில் கடத்தப்பட்ட 35 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம் ரெயிலில் கடத்தப்பட்ட 35 கிலோ கஞ்சா பறிமுதல்
X
போலீசார் விசாரணை
சேலம் ரெயிலில் கடத்தப்பட்ட 35 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.. இதை கடத்தியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து சேலம் வழியாக ரெயில்களில் அடிக்கடி கஞ்சா கடத்தப்படுகிறது. இதையடுத்து கஞ்சா கடத்தலை தடுக்க ரெயில்வே போலீசார், போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் சேலம் ரெயில்வே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அய்யாத்துரை தலைமையில் போலீசார் நேற்று காலை ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் வழியாக வந்த ரெயில்களில் சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஹடியா- பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை நடத்தினர். அப்போது கழிவறை அருகே சாக்குமூட்டை ஒன்று கேட்பாரற்று கிடந்தது. போலீசார் அதை பிரித்து பார்த்த போது 35 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது. வெளிமாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததும், போலீசாரை கண்டதும் கஞ்சா கடத்திய வந்தமர்ம நபர்கள் ரெயிலில் கழிவறை அருகில் மூட்டையை விட்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து சாக்குமூட்டையில் இருந்த 35 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கஞ்சாவை ரெயிலில் கடத்தி வந்தவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story