காந்திகிராமம் டூவீலரில் மதுபானம் கடத்தல்-ரூ 35 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்கள் பறிமுதல்.
காந்திகிராமம் டூவீலரில் மதுபானம் கடத்தல்-ரூ 35 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்கள் பறிமுதல். கரூர் மாவட்டம் பசுபதி பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட காந்திகிராமம் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி அளவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தார் காவல் உதவி ஆய்வாளர் சசிகலா. அப்போது அவ்வழியாக வந்த ஒரு டூ வீலரை தடுத்து நிறுத்திய போது அந்த நபர் டூவீலரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். வாகனத்தை ஆய்வு செய்தபோது அதில் ஒரு லிட்டர் அளவு கொண்ட சில்வர் கப் பிராந்தி 8 பாட்டில்,எம் சி 2- பாட்டில்,மேன்சன் ஹவுஸ் 4-பாட்டில் , வி எஸ் ஓ பி 2 பாட்டில், ஹனி பீ 2 பாட்டில் ,750 எம்எல் கொண்ட மர்பியூஸ் 4 பாட்டில்,பிரண்ட்ஷிப் பிராந்தி 2 பாட்டில், ராயல் ஸ்டேஜ் டீலக்ஸ் விஸ்கி 2 பாட்டில் , வி எஸ் ஓ பி பிரஞ்ச் பிராந்தி 2 பாட்டில்,500ML கொண்ட லெதர் பீர் 18 பாட்டில் என மொத்தம் 46 பாட்டில்களில் 34.500லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த மதுபானங்களின் மதிப்பு ரூபாய் 34,978 என மதிப்பீடு செய்துள்ளனர். மேலும் மது பாட்டில்களை கடத்தி வந்த டூவீலரையும் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்
Next Story







