அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 35 வகையான கலைத் திருவிழா போட்டி

பெரம்பலூர் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 35 வகையான கலைத் திருவிழா போட்டி கீழக்கணவாய் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் கல்லூரி கலைத் திருவிழா நிறைவு விழா நடைபெற்றது வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்று பெரம்பலூர் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி கீழக்கனவாயில் தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் கல்லூரி கலைத் திருவிழா நிறைவு விழா நடைபெற்றது விழாவிற்கு கல்லூரி முதல்வர் திரு.பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். இந்நிகழ்விற்கு முதலாம் ஆண்டு துறை தலைவர் முனைவர். சு.தமிழ்வாணன் வரவேற்புரை ஆற்றினார். கலை திருவிழாவில் மாணவ மாணவியருக்கு 35 வகையான போட்டிகள் நடத்தப்பட்டு முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினராக பெரம்பலூர் மாவட்ட அறநிலையத்துறை தலைவர் ஆ.கலியபெருமாள் கலந்துகொண்டு மாணவர்களிடையே தமிழகத்தில் அழிந்து வரும் கலைத்துறைகளைப் பற்றியும் அழியாமல் பாதுகாக்க மாணவர்களிடையே விழிப்புணர்வு பற்றியும் எடுத்துரைத்தார் தமிழர்களின் சங்க கால இலக்கியம் கலை பற்றிய சிறப்புகளை எடுத்துரைத்தார் எனவே தற்போது நமது மாணவ சமுதாயம் இவை அனைத்தையும் நன்கு உணர்ந்து இயற்கையை நேசித்து வாழ்வியலுடன் இணைந்த கலையை போற்றி வாழ வேண்டும் மற்றும் எவ்வித போதைப் பழக்கங்களுக்கும் அடிமை இல்லாமல் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதொடருடன் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்று எடுத்துக் கூறினார். விழாவில் சிறப்பு பேச்சாளராக வ. சந்திரமௌலி கலையின் சிறப்பு, அது உணர்வின் வெளிப்பாடாகவும், அழகின் பிறப்பிடமாகவும், மகிழ்ச்சியைத் தருவதாகவும், நாகரிகத்தின் ஒளியாகவும், பண்பாட்டின் அடித்தளமாகவும் இருப்பதே ஆகும். மேலும், இது கற்பனைத்திறனை வளர்த்து, உடல் மற்றும் உள்ளத்தின் திறன்களை ஒருங்கிணைத்து, மனித படைப்பாற்றலின் வெளிப்பாடாக விளங்குகிறது. இலக்கியம், இசை, சிற்பம், ஓவியம், நடனம் போன்ற பல வடிவங்களில் கலை சிறந்து விளங்குகிறது என்று சொற்பொழிவு ஆற்றினார். இவ்விழாவிற்கு அனைத்து துறை தலைவர்களான பிரித்விராஜ்,சசிகலா,சுகந்தி,ராஜன் ஆகியவர்கள் வழிநடத்தினர். விழாவின் இறுதியாக இயந்திரவியல் துறை தலைவர் சுகந்தி நன்றி உரை வழங்கினார்.
Next Story

