ஸ்ரீவில்லிபுத்தூர் ஆம்னி பேருந்தில் இருந்து 3.5 பவுன் நகை திருடிய குற்றவாளிகள் 4 பேர் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டனர்.....*

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆம்னி பேருந்தில் இருந்து 3.5 பவுன் நகை திருடிய குற்றவாளிகள் 4 பேர் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டனர்.....*
X
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆம்னி பேருந்தில் இருந்து 3.5 பவுன் நகை திருடிய குற்றவாளிகள் 4 பேர் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டனர்.....*
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆம்னி பேருந்தில் இருந்து 3.5 பவுன் நகை திருடிய குற்றவாளிகள் 4 பேர் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டனர்..... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் ஆம்னி பேருந்தில் பயணித்த தம்பதியிடம் இருந்து 3.5பவுன் நகைகளை திருடி சென்ற வடநாட்டு ஆசாமிகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 10ஆம் தேதி சங்கரன்கோவிலைச் சேர்ந்த பட்டமுத்து தனது மனைவியுடன் சென்னை செல்வதற்காக ஆம்னி பேருந்து ஒன்றில் பயணம் செய்துள்ளார். பேருந்தை பயணிகள் இரவு உணவு சாப்பிடுவதற்காக ஓட்டுநர் அழகாபுரி அருகே அனுக்கிரஹா ஹோட்டலில் நிறுத்தியுள்ளார். பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறங்கி இரவு உணவு உண்பதற்காக ஹோட்டலுக்கு சென்ற நேரம் ஹோட்டல் பார்க்கிங்கில் காரில் காத்திருந்த மத்தியபிரதேசத்தை சேர்ந்த அப்பாஸ்கான் மற்றும் மோலா என்ற இருவரும் பட்டமுத்து தம்பதியினர் பயணித்த பேருந்தில் ஏறி பட்டமுத்துவின் மனைவி தங்களது சீட்டில் விட்டு சென்ற கைப்பையை எடுத்துக் கொண்டு தப்பித்துள்ளனர். உணவருந்தி பேருந்துக்கு திரும்பிய தம்பதியினர் தங்களது கைப்பை காணாமல் போனதாகவும் அதில் 3.5 பவுன் தங்க நகைகள் இருப்பதாகவும் நத்தம்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் நத்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் மாவட்ட கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜா அறிவுறுத்தலின்படி தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் மேற்படி குற்ற நிகழ்வில் சம்பந்தப்பட்ட நபர்கள் விருதுநகர் மாவட்ட எல்லைக்குள் சுற்றி திரிவதாக தனிப்படை போலீசாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் வைத்து 3.5 பவுன் நகையை திருடி சென்ற அப்பாஸ்கான், மோலா மற்றும் நகை திருடுவதற்கு உதவியாக இருந்த அக்ரம்கான், அக்ரம்முல்தானி ஆகிய நான்கு பேரையும் சுற்றிவழித்து கைது செய்து அவர்களிடம் இருந்து நகை மற்றும் அவர்கள் பயணித்த நான்கு சக்கர வாகனத்தையும் மீட்டனர். மேலும் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் இந்த திருட்டில் மட்டும் தான் சம்பந்தப்பட்டுள்ளார்களா? அல்லது தமிழகத்தில் நடைபெற்ற வேறு ஏதும் திருட்டு சம்பவத்தில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பன உள்ளிட்ட பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். வடமாநிலத்தைச் சேர்ந்த நபர்கள் தமிழ்நாட்டில் திருட்டு சம்பவத்தில் அதிகமாக ஈடுபடும் சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story