திருப்பூரில் 350 மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்களை வழங்கிய தமிழக வெற்றிக் கழகத்தினர்!

திருப்பூரில் 350 மாணவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான நோட்டு, புத்தகங்களை தமிழக வெற்றிக் கழகத்தினர் வழங்கினர்.
350 மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கிய தமிழக வெற்றிக்கழகத்தினர். திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட முத்துப்புதூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பயிலும் 350 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மோதிலால்,தலைமை மற்றும் ஜல்லிக்கட்டு போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் முன்னிலையில் ரூ.10 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நோட்டு புத்தகம் பேனா பென்சில் உள்ளிட்டவற்றை வழங்கினார். மாணவர்களுக்கு விருது வழங்கிய தனது பணியை துவக்கிய தலைவர் விஜயை போல திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு உதவிகள் செய்து தங்கள் பணியை துவக்கி உள்ளதாகவும்,  இதே போல தொடர்ந்து அனைவரும் செய்தால் திருப்பூரில் தமிழக வெற்றி கழகத்தின் வெற்றி நிச்சயம் என தெரிவித்தனர்.மேலும் இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த தங்க தமிழ் செல்வன், கார்த்திக் ராம்குமார், எம் ஜே எம் மணி, முத்தமிழ் ஜி பிரவீன், குமார் ஜி எஸ் மோகன், ரவிக்குமார், சக்திவேல், ஸ்ரீராம், தரணிஷ் குமார், விஜயகுமார், பரசுராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Next Story