அரசு மருத்துவமனையில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம்
பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனையில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம் கட்டும் பணியினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் 15 வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம் கட்டும் பணியினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இன்று அடிக்கல் நாட்டில் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்றதிலிருந்து ஏழை எளிய அடித்தட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், கிராமப்புறம், மற்றும் நகர்ப்புறங்களில் பொதுமக்களுக்கு பயன் தரும் வகையிலான பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேப்பந்தட்டை வட்டம் கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனையில் 15 வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம் கட்டும் பணியினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் இன்று அடிக்கல் நாட்டில் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, ஆலத்தூர் வட்டம் திருவளக்குறிச்சி ஊராட்சியில் நகரும் நியாய விலை கடையினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு குடிமைப் பொருட்களை பொருட்களை வழங்கினார். பின்னர் பெரம்பலூரில் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமோத பிரம்மபுரீஷ்வரர் சுவாமி திருத்தேரை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் வடம் பிடித்து,தொடங்கி வைத்தார் இந்நிகழ்வுகளில், பெரம்பலூர் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ஆ.கலியபெருமாள், அட்மா தலைவர் வீ.ஜெகதீசன், இணை இயக்குநர் (மருத்துவ நலப்பணிகள்) மரு.கே.மாரிமுத்து, கூட்டுறவுத்துறை துணை பதிவாளர் சிவக்குமார், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் டி.சி.பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story



