செண்பகத்தோப்பு அணையிலிருந்து 3500 கனஅடி நீர் திறப்பு. ஆற்றங்கரைகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை
Arani King 24x7 |1 Dec 2024 10:34 AM GMT
ஆரணி, டிச 1. ஆரணி அடுத்த படவேடு அருகே உள்ள செண்பகத்தோப்பு அணை நிரம்பியதால் அணையிலிருந்து 3500 கனஅடி நீர் திறக்கப்பட்டு ஆற்றங்கரை பகுதி மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
ஆரணி அடுத்த படவேடு அருகே உள்ள செண்பகத்தோப்பு அணை நிரம்பியதால் அணையிலிருந்து 3500 கனஅடி நீர் திறக்கப்பட்டு ஆற்றங்கரை பகுதி மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஃபெங்கல் புயல் காரணமாக ஆரணி பகுதியில் சனிக்கிழமை முழுவதும் பலத்த மழை பெய்தது. மேலும் ஆரணி அடுத்த படவேடு அருகே உள்ள செண்பகத்தோப்பு அணை அதன் முழு கொள்ளளவு எட்டி நிரம்பியது. இதன் காரணமாக அணைக்கு வரும் 3500 கன அடி நீரை அப்படியே ஞாயிற்றுத்கிழமை காலையில் திறக்கப்பட்டது. இதனால் படவேடு, கண்ணமங்கலம், புதுப்பாளையம், குண்ணத்தூர் கமண்டல நாகநதிக்கரை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் செண்பகத்தோப்பு அணை திறக்கப்பட்டதால் ஆரணி கமண்டல நாகநதியில் வெள்ளம் கரைபுரண்டோடியது.
Next Story