பணி நிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்: 3,500-க்கும் மேற்பட்டோர் கைது

X
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு ரூ.12,500 மாத சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நேற்று நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 1,700 பெண்கள் உட்பட 3,500-க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அப்போது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி தங்களை தமிழக அரசு பணிநிரந்தரம் செய்ய வேண்டுமென முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
Next Story

