ஆம்பூர் அருகே கோழி பண்ணையில் மின் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் 3500 கோழிகள் எரிந்து நாசமானது

ஆம்பூர் அருகே விவசாயிக்கு சொந்தமான கோழி பண்ணையில் மின் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் 3500 கோழிகள் எரிந்து நாசமானது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே விவசாயிக்கு சொந்தமான கோழி பண்ணையில் மின் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் 3500 கோழிகள் எரிந்து நாசமானது உமராபாத் காவல் துறையினர் விசாரணை திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கரும்பூர் ஊராட்சிக்குட்பட்ட சாமுண்டியம்மன் தோப்பு பகுதியை சேர்ந்தவர் விவசாயி தரணிராஜன். இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயத்துடன் கோழி பண்ணை அமைத்து தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் கோழி பண்ணையில் இன்று விடியற்காலையில் 3 மணியளவில் கோழி பண்ணை கொட்டகையில் மின் கசிவு ஏற்பட்டு திடீரென தீபற்றி மள மளவென கொழுந்து விட்டு எரிய தொடங்கியுள்ளது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் விரைந்து சென்ற ஆம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய அலுவலர் மெபூப் தலைமையில் தீயணைப்பு துறையினர் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுப்படுத்தினர். இருப்பினும் கொட்டகை மற்றும் கோழிகள் எரிந்து கருகி சாம்பலாகியுள்ளது. இதில் ரூபாய். 8 லட்சம் மதிப்பிலான பண்ணை கொட்டகை மற்றும் 3500 கோழிகள் என மொத்தம் ரூ. 15 லட்சம் மதிப்பிலான பண்ணை கொட்டகை மற்றும் கோழிகள் தீயில் கருகி நாசமானது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற உமரபாத் போலீஸார் வழக்கு பதிவு செய்து தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story