மல்லாங்கிணறு பேரூராட்சியில் பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ. 3500 லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலரை கையும் களவுமாக கைது செய்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார்*

மல்லாங்கிணறு பேரூராட்சியில் பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ. 3500 லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலரை கையும் களவுமாக கைது செய்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார்*
X
மல்லாங்கிணறு பேரூராட்சியில் பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ. 3500 லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலரை கையும் களவுமாக கைது செய்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார்*
விருதுநகர் அருகே மல்லாங்கிணறு பேரூராட்சியில் பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ. 3500 லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலரை கையும் களவுமாக கைது செய்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மல்லாங்கிணறு சூரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் இளம் விவசாயி சூரியகுமார் (24). இவர் தனது தந்தை ஆசிர்வாதம் பெயரில் உள்ள பட்டாவை தனது பெயருக்கு மாற்ற மல்லாங்கிணறு கிராம நிர்வாக அலுவலர் கரைமேலுவை நாடியுள்ளார்.அவர் பெயர் மாற்றம் செய்துதர ரூ.6 ஆயிரம் கையூட்டாக கேட்டுள்ளார். இந்நிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத இளம் விவசாயி சூரியகுமார் விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரை அணுகியுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழிகாட்டுதலின்படி ராசாயனம் தடவிய பணத்தை சூரியகுமார் கொடுக்க அதை கிராம நிர்வாக அலுவலர் கரைமேலு பெறும் அங்கு மறைந்திருந்த ஏ.டி.எஸ்.பி ராமச்சந்திரன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் கிராம நிர்வாக அலுவலர் கரைமேலுவை கையும் களமாக பிடித்து கைது செய்தனர். மேலும் பணத்தை பறிமுதல் செய்து தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.‌
Next Story