மோகனூர் ,கபிலர்மலை பகுதியில் அமைச்சர் மதிவேந்தன் ரூ.3.52 கோடி மதிப்பீட்டில் பூமி பூஜை.

X
Paramathi Velur King 24x7 |17 Feb 2025 8:50 PM ISTமோகனூர் ,கபிலர்மலை பகுதியில் அமைச்சர் மதிவேந்தன் ரூ.3.52 கோடி மதிப்பீட்டில் பூமி பூஜை.
பரமத்தி வேலூர், பிப். 17: மோகனூர் ,கபிலர்மலை பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மதிவேந்தன் ரூ.3.52 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். நாமக்கல் மாவட்டம், மோகனூர், கபிலர்மலை உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட கலெக்டர் உமா, தலைமையில், எம்.பி மாதேஸ்வரன், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலையில். ரூ.77.89 இலட்சம் மதிப்பீட்டில் மோகனூர் ஊராட்சி ஒன்றியம் ஆரியூர் கிராம அறிவுசார் மையங்கள் கட்டும் பணிகள், தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் சார்பில், ரூ.2.75 கோடி மதிப்பீட்டில் கபிலர்மலையில் புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் கட்டும் பணி,புதிய திட்டப்பணிகளுக்கு அமைச்சர் மதிவேந்தன் அடிக்கல் நாட்டினார். இவ்விழாவில் அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்ததாவது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். குறிப்பாக பட்டியலின பழங்குடியினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் சாலை வசதி, கழிப்பிட வசதி, சாக்கடை வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான திட்டங்களை நிறைவேற்றி வருகின்றார்கள் என்று கூறினார். நிகழ்ச்சிகளில் மோகனூர் அட்மா குழுத் தலைவர் நவலடி, கபிலர்மலை ஒன்றிய செயலாளர் சண்முகம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் முருகன், தாட்கோ செயற்பொறியாளர் நடராஜன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
