பெரு நிறுவன சமூக பொறுப்புத்திட்டத்தில் பள்ளியில் ரூ.36 லட்சத்தில் புதிய கட்டடங்கள் திறப்பு
Sivagangai King 24x7 |2 Aug 2024 8:40 AM GMT
சிவகங்கை அரசுப் பள்ளியில் அம்மையப்பர் குழுமத்தின் சமூக பொறுப்புத்திட்டம் மூலமாக ரூ.36.65 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள் பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைப்பு
சிவகங்கை மாவட்டம், அரசனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், அரசனூரில் இயங்கி வரும், பர்ஸ்ட் கார்மெண்ட் மேனுபேக்சரிங் கம்பெனி (இ) பிரைவேட் லிமிடெட் சார்பாக அரசனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு நிறுவன சமூக பொறுப்புத்திட்டம் மூலமாக சுமார் ரூ. 36,65,434 (முப்பத்தாறு லட்சத்து அறுபத்து ஐந்தாயிரத்து நானுற்று முப்பத்து நான்கு ரூபாய்) மதிப்பீட்டில் வகுப்பறை கட்டிடம் கலையரங்கம் பேவர் பிளாக் சாலை கொடிமரம் மற்றும் ஆழ்துளை குடிநீர் குழாய் ஆகிய உட்கட்டமைப்பு வசதிகள் அமைத்து தரப்பட்டது. அரசனூரில் நடைபெற்ற புதிய வகுப்பறை மற்றும் கலையரங்க திறப்பு விழாவுக்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் இராஜசேகரன் தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநர் சிவராமன் திறந்து வைத்தனர். இதில், பர்ஸ்ட் கார்மெண்ட் மேனுபேக்சரிங் கம்பெனி (இ) பிரைவேட் லிமிடெட் நிறுவனர் ஹரிதாஸ், நிர்வாக இயக்குநர் கார்த்திகேயன், மூத்த அலுவலர் அஹ்சய்பாய், சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மஞ்சுளா, வட்டாட்சியர் சிவராமன், பள்ளித்தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி, வட்டாரக்கல்வி அலுவலர் பாலாமணி, ஊராட்சித் தலைவர் செல்வராணி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மாரிமுத்து, மூத்த வழக்குரைஞர் மோகனசுந்தரம், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதியின் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
Next Story