அதிமுகவினர் 36 வார்டுகளிலும் எம்ஜிஆர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடினர்*

X
அருப்புக்கோட்டையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பிறந்த நாளை நகர அதிமுகவினர் 36 வார்டுகளிலும் எம்ஜிஆர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடினர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்ஜிஆர் 108 வது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நகர அதிமுக சார்பில் அதிமுக நகர செயலாளர் சோலை சேதுபதி ஏற்பாட்டில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அருப்புக்கோட்டை நகரில் உள்ள 36 வார்டுகளிலும் நகர அதிமுக சார்பில் எம்ஜிஆர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கி கொண்டாடப்பட்டது. முன்னதாக பெர்க்கின்ஸ்புரத்தில் உள்ள எம்ஜிஆர் திருவருவ சிலைக்கு நகர அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் போடம்பட்டி சங்கரலிங்கம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

