சேலத்தில் இருந்து இயக்கப்படும் 36 அரசு பஸ்கள் இன்று முதல் கிளாம்பாக்கத்துடன் நிறுத்தம்

சேலத்தில் இருந்து இயக்கப்படும் 36 அரசு பஸ்கள் இன்று முதல் கிளாம்பாக்கத்துடன் நிறுத்தம்
X
போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
சென்னை, தாம்பரம் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தென் மாவட்டங்களில் இருந்து திண்டிவனம், செங்கல்பட்டு வழியாக தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்த அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் அனைத்தும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சேலம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து காலை முதல் இரவு வரையிலும் சுமார் 36 அரசு பஸ்கள் சென்னைக்கு இயக்கப்பட்டு வந்தன. ஆனால் இன்று முதல் சேலத்தில் இருந்து இயக்கப்படும் அரசு பஸ்கள் அனைத்தும் கிளாம்பாக்கத்துடன் நிறுத்தப்பட உள்ளதாக போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சேலம் அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறுகையில், சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் சேலத்தில் இருந்து இயக்கப்படும் அரசு பஸ்கள் அனைத்தும் கிளாம்பாக்கத்துடன் நிறுத்தப்பட உள்ளது. அதன்பிறகு அங்கிருந்து தாம்பரம், எழும்பூருக்கு வேறு பஸ்களில் பயணம் செய்யலாம். இதற்காக சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளது, என்றனர்.
Next Story