அன்னமலையில் புகழ்பெற்ற தண்டாயுதபாணி ஸ்வாமி கோவில் 36ம் ஆண்டு காவடி பெருவிழா கோலாகலம்

அன்னமலையில் புகழ்பெற்ற தண்டாயுதபாணி ஸ்வாமி கோவில் 36ம் ஆண்டு காவடி பெருவிழா கோலாகலம்
X
திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
அன்னமலையில் புகழ்பெற்ற தண்டாயுதபாணி ஸ்வாமி கோவில் 36ம் ஆண்டு காவடி பெருவிழா கோலாகலம் நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள அன்னமலையில் புகழ்பெற்ற தண்டாயுதபாணி ஸ்வாமி கோவில் உள்ளது.‘நீலகிரி மாவட்டத்தின் பழனி’ எனவும் ‘முருகனின் 8வது படைவீடு’ எனவும் பக்தர்களால் போற்றப்படுகிறது மிகவும் அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ள இந்த கோவிலில் கிருத்திகை மற்றும் காவடி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். தமிழ் புத்தாண்டு நாளான சித்திரை 1ம் தேதி நடைபெறும் காவடி திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகளை ஏந்தி ஊர்வலம் செல்வார்கள். நடப்பாண்டு அன்னமலை முருகன் கோவிலில், 48ம் ஆண்டு நிறைவு விழா; பஞ்சலோக உற்சவமூர்த்தி பவனி விழா; உலக நல யாக விழா; 36ம் ஆண்டு காவடி பெருவிழா ஆகியவை நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு வாஸ்து வழிபாடு, மகா கணபதி வேள்வி, நவகிரக வேள்வியுடன் திருவிழா துவங்கியது. இதை தொடர்ந்து கொடியேற்றம், காப்பு கட்டுதல் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இரவு, 8:00 மணியளவில் வான வேடிக்கை நடைபெற்றது. இதை தொடர்ந்து முக்கிய நிகழ்வான காவடி திருவிழா நேற்று காலை அன்னமலை அடிவார விநாயகர் கோவிலில் இருந்து தொடங்கியது. 'பால் காவடி, பன்னீர் காவடி, சந்தன காவடி,' என, பல்வேறு வகையான காவடிகளை ஏந்தி, ஓணிக்கண்டி, கீழ்குந்தா, கொட்டரக்கண்டி, மஞ்சூர், குந்தா கேம்ப், மட்டகண்டி வழியாக மதியம், 3:00 மணிக்கு காவடி ஊர்வலம் கோவில் வந்தடைந்தது. காவடி எடுத்து வந்த பக்தர்களுக்கு நீர், மோர் வழங்கப்பட்டது. இதையடுத்து மகாயாகம், 108 திரவிய யாகம், கோ பூஜை, உலக நல பிரார்த்தனை நடந்தது. மேலும், பல்வேறு பகுதிகளை சேர்ந்த சாது சன்னியாசிகள் ஆன்மிகம் குறித்து பேசினர். அன்னதானம் மற்றும் படுகர், மலைவாழ் பழங்குடிகளின் கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற்றது.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் ஸ்தாபகர் குரு கிருஷ்ணாநந்தாஜி தலைமையிலான குழுவினர் செய்து இருந்தனர். பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது அமைதியும் எழில் சூழ்ந்த மலைக்குன்றுகளும் அமைந்து காண்பவர் கண்களையும் உள்ளங்களையும் கொள்ளை கொள்ளும் வகையில் இக்கோயில் அமைந்துள்ளது குறுபிடதக்கதாகும்
Next Story