உங்களுடன் ஸ்டாலின் திட்ட 36 சிறப்பு முகாம் வாயிலாக 19,436 மனுக்கள் பொது மக்கள் அளித்துள்ளனர் - மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் தகவல்

உங்களுடன் ஸ்டாலின்” என்ற சிறப்பு திட்டத்தினை 15.07.2025 அன்று தமிழ்நாடு முழுவதும் தொடங்கி வைத்தார்கள். இச்சிறப்பு திட்டத்தினை பெரம்பலூர் மாவட்டத்திலும், 15.07.2025 அன்று மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் துவக்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார்கள்.
பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட 36 சிறப்பு முகாம் வாயிலாக 19,436 மனுக்கள் பொது மக்கள் அளித்துள்ளனர் - மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் தகவல். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற சிறப்பு திட்டத்தினை 15.07.2025 அன்று தமிழ்நாடு முழுவதும் தொடங்கி வைத்தார்கள். இச்சிறப்பு திட்டத்தினை பெரம்பலூர் மாவட்டத்திலும், 15.07.2025 அன்று மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் துவக்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார்கள். அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உரிய வழிகாட்டுதலின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் நகர்ப்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் 15.07.2025 முதல் 13.08.2025 வரை 36 முகாம்கள் நடைபெற்றுள்ளது. இம்முகாம்களில் பொதுமக்கள் பல்வேறு தேவைகள், கோரிக்கைகள் வேண்டி 19,346 மனுக்கள் அளித்துள்ளனர். குறிப்பாக இதில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வேண்டி11,331 மனுக்கள் அளித்துள்ளனர். இம்மனுக்கள் அனைத்தும் இணையவழியாக பதிவேற்றம் செய்து தொடர்புடைய துறைகளுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் முகாம் நாள் அன்றே பல்வேறு விண்ணப்ப மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு வருகிறது. என்பது குறிப்படத்தக்கது. உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மூலம் பயன்பெற்ற பயனாளி திருமதி ஷீலா என்பவர் தெரிவித்ததாவது: என்னுடைய பெயர் ஷீலா. மாவட்ட தொழில் மையம் சார்பாக சுயமாக தொழில் தொடங்க வேண்டி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிற்கு வருகை தந்து அதன் விவரங்கள் குறித்து கேட்டு அறிந்து மனு வழங்கினேன். அப்போது முகாமில் இருந்த அலுவலர்கள் சுயதொழில் தொடங்குவதற்கு உங்களுக்கு தகுதி உள்ளது எனக் கூறி என்னை ஊக்கப்படுத்தினார்கள். இது எனக்கு மிகவும் திருப்தியாக இருந்தது. உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மூலம் நான் எனது வீட்டிற்கு அருகிலேயே தொழில் தொடங்குவதற்கான விவரங்களை அறிந்து கொண்டேன். இல்லையென்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும், மாவட்ட தொழில் மையத்திற்கும் அலைந்து சிரமபட வேண்டிய நிலை இருந்திருக்கும். இந்த முகாமினால் எனக்கு அலைய வேண்டிய வேலை குறைந்துள்ளது. எனக்கு தேவையான தகவலை முழுமையாக பெற்றுள்ளேன் அதேபோன்று மற்ற இதர துறைகள் மூலமாக வழங்கப்படும் சேவைகளையும் அறிந்து கொண்டேன் இந்த முகாம் பொதுமக்களுக்கும் என்னைப் போன்று அரசின் திட்டங்களை தெரியாமல் இருப்பவர்களுக்கும் அறிந்து தெரிந்து கொள்வதற்கும், மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்தத் திட்டத்தினை அறிவித்து செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நிறைந்த மனமாக நன்றி தெரிவித்து க்கொள்கிறேன் என தெரிவித்தார். மேலும், உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் பொதுமக்களிடம் பல்வேறு வரவேற்புகளை பெற்று முகாம் நடைபெறும் நாட்களில் ஏராளமான பொதுமக்கள் மனு அளித்து பயன்பெற்று வருகின்றனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடைய அறிவுறுத்தலுக்கினங்க பொதுமக்களிடமிருந்து பெறப்படும் அனைத்து மனுக்களுக்கும் விரைந்து தீர்வு காணப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட இடங்களில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாமினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் வருகின்ற வாரத்தில் 19.08.2025 அன்று வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வி.களத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட துங்கபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியிலும், 20.08.2025 அன்று பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோனேரிப்பாளையம் மற்றும் ஆலம்பாடி ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்களுக்கு கோனேரிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொதுமக்களுக்கு கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 21.08.2025 அன்று வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எழுமூர், கீழப்புலியூர் ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்களுக்கு எழுமூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காரியனூர், பில்லங்குளம் ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்களுக்கு பில்லங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாம்கள் காலை 09.00 மணியிலிருந்து மதியம் 03.00 வரை நடைபெறும். எனவே பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக, தேவையான ஆவணங்களை இணைத்து முகாம் நடைபெறும் தினத்தன்று, முகாம்கள் நடைபெறும் இடங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை அளித்து அரசின் பல்வேறு சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்டத்தில் ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
Next Story