ராசிபுரம் அருகே 3.6 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சுப்புராயன் நினைவு மணி மண்டபத்தை MP.ராஜேஷ்குமார் பார்வையிட்டார் ...

ராசிபுரம் அருகே 3.6 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சுப்புராயன் நினைவு மணி மண்டபத்தை MP.ராஜேஷ்குமார் பார்வையிட்டார் ...
X
ராசிபுரம் அருகே 3.6 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சுப்புராயன் நினைவு மணி மண்டபத்தை MP.ராஜேஷ்குமார் பார்வையிட்டார் ...
ராசிபுரம் அருகே 3.6 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சுப்புராயன் நினைவு மணி மண்டபத்தை MP.ராஜேஷ்குமார் பார்வையிட்டார் ... நினைவு மண்டபம் கட்டியாச்சு வந்து பாருங்கள் என விஜய்க்கு அழைப்பு விடுத்த MP.ராஜேஷ்குமார்... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுச்சத்திரம் பகுதியில் சென்னை மாகாண முன்னாள் முதலமைச்சர் டாக்டர்.,பா.சுப்புராயன் அவர்களின் மணிமண்டபம் மற்றும் மார்பளவு சிலை கூடிய மணி மண்டபம் புதிதாக கட்டப்பட்டு உள்ளது. இதனை மாநிலங்களவை உறுப்பினர் KRN.ராஜேஷ்குமார் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு, செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் பகுதியை சேர்ந்த சுப்புராயன் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகவும், ஒன்றிய அமைச்சராகவும், மகாராஷ்டிரா ஆளுநராகவும் இருந்தவர். சுப்புராயன் அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என இந்த பகுதி மக்களின் கோரிக்கையாக இருந்தது, அதனை திமுக கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில் சுப்பராயனிற்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் 3கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில்,கடந்த 2வருடமாக சுப்புராயன் நினைவு மணிமண்டபம் கட்டுமான பணி நடைபெற்று வந்தது, தற்போது 99 சதவீத பணிகள் முடிவு பெற்றுள்ளது. வருகின்ற 13-ஆம் தேதி தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக சுப்பராயன் நினைவு மண்டபம் மார்பளவு சிலையை திறந்து வைத்துள்ளார். நினைவை போற்றும் விதமாக இந்த மணிமண்டபத்தில் திருமண நிகழ்ச்சி மற்றும் வரும் காலத்தில் அரசியல் நிகழ்ச்சி நடத்தி கொள்ளலாம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாமக்கல்லுக்கு வந்த விஜய் அப்போது பேசுகையில் சுப்புராயன் மணிமண்டபம் கட்டப்படவில்லை என அப்பட்டமான பொய்யை பேசினார், அவர் நாமக்கல்க்கு வரும்பொழுது 90 சதவீதம் பணிகள் முடிவு பெற்று திறக்கும் நிலையில் இருந்தது. திமுக தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை சுப்புராயன் மணிமண்டபம் என்ன ஆச்சு என கேட்டார், அதற்கு எம்பி ராஜேஷ்குமார் கட்டியாச்சு திறக்கிறேன் வந்து பாருங்கள் என விஜய்க்கு அழைப்பு விடுக்கும் தோணியில் கூறினார்...
Next Story