கந்தம்பாளையத்தில் மாட்டு கொட்டகையில் பதுக்கிய ரூ 36,000 மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்.

கந்தம்பாளையத்தில் மாட்டு கொட்டகையில் பதுக்கிய ரூ 36,000 மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்.
கந்தம்பாளையத்தில் மாட்டு கொட்டகையில் பதுக்கிய ரூ 36,000 மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல். கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட கந்தம்பாளையத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக காவல் உதவி ஆய்வாளர் சண்முகானந்தா வடிவேலுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ஏப்ரல் 17ஆம் தேதி மாலை 6:30 மணி அளவில், கந்தம்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, நாமக்கல் மாவட்டம், மோகனூர், கே.புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் வயது 45 என்பவருக்கு சொந்தமான மாட்டுக் கொட்டகையில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது, அங்கு ஹான்ஸ் 1860 பாக்கெட்,கூல் லிப் 272 பாக்கெட்டுகளும், விமல் பாக்கு 2760 பாக்கெட்டுகளும், ஏ1 பாக்கு 2760 பாக்கெட்டுகளும் இருந்ததை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். இந்த பொருட்களின் மொத்த எடை 48,490 கிலோ கிராம். இதனுடைய மதிப்பு ரூபாய் 35,752 என மதிப்பீடு செய்த காவல்துறையினர், இந்த குற்ற செயலில் ஈடுபட்ட ரமேஷை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து, பின்னர் காவல் நிலைய பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.
Next Story