கரூர் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை. அனைத்து 36.70 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
Karur King 24x7 |13 Dec 2024 2:31 AM GMT
கரூர் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை. அனைத்து 36.70 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
கரூர் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை. அனைத்து 36.70 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து தமிழக முழுவதும் மழை வெளுத்து வாங்குகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக பாதிப்புகளும் உருவாகி வருகிறது. நேற்று முன்தினம் மாலை பெய்ய துவங்கிய மழையானது தொடர்ந்து விடிய விடிய இன்று வரை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்திலும் இதே நிலை தொடர்ந்து வருகிறது. நேற்று கரூர் மாவட்டத்தில் பெய்த மழை நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் சற்று முன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கரூரில் 33.80 மில்லி மீட்டர், அரவக்குறிச்சியில் 70.50 மில்லி மீட்டர், அணைப்பாளையத்தில் 57.20 மில்லி மீட்டர், க.பரமத்தியில் 39.00 மில்லி மீட்டர், குளித்தலையில் 29.20 மில்லி மீட்டர், தோகை மலையில் 70.60 மில்லி மீட்டர், கிருஷ்ணராயபுரத்தில் 35.40 மில்லி மீட்டர், மாயனூரில் 43.00 மில்லி மீட்டர், மாவட்டத்தில் அதிகபட்சமாக பஞ்சபட்டியில் 80.00 மில்லி மீட்டர், கடவூரில் 32.00 மில்லி மீட்டர், பாலவிடுதியில் 20.00 மில்லி மீட்டர், மயிலம்பட்டியில் 26.00 மில்லி மீட்டர், என மொத்தம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 536.70 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இதனுடைய சராசரி அளவு 44.73 மில்லி மீட்டர் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story