குமரியில் 37 கடலோர கிராமங்களை தனி ஊராட்சியாக மாற்ற நடவடிக்கை

X
குமரி மாவட்டத்தில் 95 கிராம ஊராட்சிகள் 51 பேரூராட்சிகள் 4 நகராட்சிகள் மற்றும் ஒரு மாநகராட்சி ஆகியவை உள்ளன. இந்த நிலையில் 10 ஊராட்சிகளை பேரூராட்சியாக தர உயர்த்தவும் 25 ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைக்க இருப்பதாகவும் கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன ஆனால் அரசிடம் அது போன்ற திட்டம் இல்லை என்று கூறப்பட்ட நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம், ராஜாகமங்கலம், குருந்தன்கோடு, கிள்ளியூர், முஞ்சிறை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் மக்கள் தொகை அடிப்படையில் தனி ஊராட்சிகளாக உருவாக்குவதற்கு பொதுமக்களிடமிருந்து மனுக்கள் வரப்பட்டு உள்ளது. எனவே பணியாளர்கள் நடவடிக்கை எடுக்க எடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

