பாமகவின் 37 ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. பாமக பொருளாளர் திலகபாமா தலைமையில் நடைபெற்றது

பாமகவின் 37 ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. பாமக பொருளாளர் திலகபாமா தலைமையில் நடைபெற்றது
X
பாமகவின் 37 ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. பாமக பொருளாளர் திலகபாமா தலைமையில் நடைபெற்றது
சிவகாசியில் இன்று பாமகவின் 37 ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. பாமக பொருளாளர் திலகபாமா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சி கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திலகபாமா, மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கும் திமுக ஆட்சியை வெளியேற்றவும் மக்களுக்கான அரசியலை செயல்படுத்தவும் உறுதி ஏற்றுள்ளோம் அஜித் குமார் கொலை வழக்கில் வழக்கு கொடுத்த நிகிதா மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, அவரிடம் விசாரணை நடத்தப்படவில்லை காவல்துறை உதவியோடு நிகிதா கல்லூரிக்கு சென்று வருகிறார் நிகிதா சொல்லி தனிப்படை அமைக்கப்பட்டது என்றால் தனிப்படை அமைக்க உத்தரவிட்டது யார்? என்பதை திமுக அரசு ஏன் பேச மறுக்கிறது மின் கட்டணம் உயர்வு, வேலை வாய்ப்பின்மை போன்றவற்றால் மக்கள் விரோத அரசாக திமுக உள்ளது பாமகவிற்கு மிகப்பெரிய நம்பிக்கையை சித்திரை முழு நிலவு மாநாடு கொடுத்திருக்கிறது, இதன் மூலம் அழுத்தமான மக்கள் பணியை மேற்கொள்ள உறுதி ஏற்றுக்கொள்கிறோம் பெயர் வைக்கிறீர்களே சோறு வைக்கிறீர்களா என கேட்கும் வகையில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டம் உள்ளதாக விமர்சித்த அவர், புதிய திட்டங்களுக்கு பெயர் அழகாக வைக்கப்படுகிறது ஆனாலும் இன்னும் அரசு பள்ளிகளின் நிலைமை கூட மிகவும் மோசமாகவே உள்ளது நான்கரை ஆண்டுகளில் நல்ல திட்டங்களை செயல்படுத்தியிருந்தால் மக்கள் திமுக அரசை பாராட்டி இருப்பார்கள், ஆனால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர் ரோடு ஷோவிற்கு 500 ரூபாய் பணம் கொடுத்து மக்களை திரட்டி வருகிறார்கள் அஜித் குடும்பத்திற்கு இதுவரை அரசு தரப்பில் நிவாரண உதவி வழங்கப்படவில்லை எனவும் அவரது குடும்பத்திற்கு போக முடியாத இடத்தில் இடம் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். அதிகாரிகளை வேலை வாங்குவதற்காக தேர்வு செய்யப்பட்ட முதல்வரே அதிகாரிகள் சரியாக திட்டங்களை செயல்படுத்தவில்லை என கூறுவது பெரிய கேள்வியாக அவர் முன் நிக்கிறது ஆட்சியில் பங்கு இருந்திருந்தால் 10.5 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றியிருக்கலாம் கூட்டணி ஆட்சி அமைந்தால் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தும் இடத்தில் நாங்களும் இருக்க முடியும் ஆட்சியில் பங்கு இருந்தால் மக்களுக்கான திட்டங்களை அழுத்தம் கொடுத்து செயல்படுத்த முடியும் மக்கள் திட்டங்களை செயல்படுத்த இன்னும் கொஞ்சம் அதிகாரம் தேவைப்படுகிறது வெறுமனே கூட்டணி என்பது மட்டும் போதுமானதாக இல்லை என்பதால் மட்டுமே கூட்டணி ஆட்சி என்பதை அன்புமணி வலியுறுத்தியுள்ளார், இதனை பாமக நிர்வாகிகள் அனைவரும் வரவேற்கிறோம் மருத்துவர் ராமதாஸ், அன்புமணிக்கு இடையே ஏற்பட்டுள்ள பிளவினை இரண்டு விஷயமாக பார்ப்பதாகவும் ஒன்று தந்தை மகன் உறவு என்பதால் அதில் கருத்து சொல்ல ஒன்றுமில்லை கட்சியாக பார்த்தால் கட்சியின் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அன்புமணி ராமதாஸ் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இருவரும் இணைந்து கட்சியை வழிநடத்துவது பாட்டாளி மக்கள் கட்சிக்கும் தமிழகத்தின் தலையெழுத்துக்கும் மிகப்பெரிய வரமாக இருக்கும் தந்தை மகன் உறவாக இருந்தால் சீக்கிரம் சரியாகிவிடும் பின்னாலிருந்து பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிரான அரசியல் நகர்வாக இருந்தால் அது முறியடிக்கப்படும் முறியடிக்க கூடிய வல்லமையோடு அன்புமணி ராமதாஸ் செயலாற்றி வருகிறார் ராமதாஸ் மற்றும் அன்புமணி இணைய வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பமாக உள்ளது இணைப்பு குறித்து எந்த நிமிடத்திலும் டாக்டர் ராமதாசை சந்தித்து பேச தயாராக உள்ளோம் மருத்துவர் ராமதாஸிடம் எந்த விரோதமும் கிடையாது மருத்துவர் ராமதாஸின் அழைப்பை முக்கியமாக கருதி காத்திருக்கிறோம்
Next Story