ஆர்.வி.எஸ் கலை அறிவியல் கல்லூரியில் 37வது பட்டமளிப்பு விழா!
கோவை ஆர்.வி.எஸ் கலை அறிவியல் கல்லூரியின் 37வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் ஆர். ராசவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 620 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். தனது உரையில், “மாற்றம் எப்போதும் தேவையானது, எதிர்காலத்தை நோக்கி பயமின்றி செல்லுங்கள், நாளைய வெற்றிக்கு இன்றே கனவு காணுங்கள், AI எதிரி அல்ல, அது வழிகாட்டி” எனவும், “தேச நலனுக்காக பாடுபடுங்கள்” என்றும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். முதல்வர் த. சிவக்குமார் கல்லூரியின் செயல்பாடுகளை விளக்கினார். விழாவை கல்லூரி செயலர் சாரம்மாள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் நிர்வாக அறங்காவலர் டாக்டர் கே. செந்தில் கணேஷ், தாளாளர் திருமதி ஸ்ரீ வித்யா லட்சுமி செந்தில் கணேஷ், தலைமை நிர்வாக அதிகாரி நடராசன், துணை முதல்வர் அய்யப்பதாஸ், இயக்குனர் விவேகானந்தர், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story




