ராசிபுரம் அருகே ரூ.37 கோடி மதிப்பீட்டில் மினி டைட்டில் பார்க்கிற்கு காணொளி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.. அமைச்சர் எம்பி பங்கேற்பு..

ராசிபுரம் அருகே ரூ.37 கோடி மதிப்பீட்டில் மினி டைட்டில் பார்க்கிற்கு காணொளி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.. அமைச்சர் எம்பி பங்கேற்பு..
X
ராசிபுரம் அருகே ரூ.37 கோடி மதிப்பீட்டில் மினி டைட்டில் பார்க்கிற்கு காணொளி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.. அமைச்சர் எம்பி பங்கேற்பு..
ராசிபுரம் அருகே ரூ.37 கோடி மதிப்பீட்டில் மினி டைட்டில் பார்க்கிற்கு காணொளி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்... எம்.பி ராஜேஷ்குமார் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு விளையாட்டு மைதானம் அமைத்து தருவதாக உறுதிமொழி... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆண்டகலூர்கேட் பகுதியில் உள்ள திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் ரூ.37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மினி டைட்டில் பார்க் அமைய உள்ளது. சுமார் 64,000 சதுரடி பரப்பளவில் 3 அடுக்கு கட்டிட வசதிகளுடனும், இதில் 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வரவுள்ளது. இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக ராசிபுரம் மினி டைட்டில் பார்க்கிற்கு அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து டைட்டில் பார்க் அமைய உள்ள இடத்தில் மாநிலங்களவை உறுப்பினர் KRN.ராஜேஷ்குமார், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தனர். அதனை தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் KRN.ராஜேஷ் குமார் பேசுகையில், ராசிபுரத்தில் அமையுள்ள டைட்டில் பார்க்கிற்கு 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்பு உள்ளதாகவும்,இதில் மிகப்பெரிய நிறுவனமான டாட்டா,மாண்டன் போன்ற பெரிய நிறுவனங்கள் இருக்கின்றனர். ஒன்றிய மனிதவள மேம்பாட்டு பயிற்சி நிறுவனத்தின் கீழ் ஸ்கில் சென்டர் துவங்கும் பணியையும் மேற்கொண்டு இருக்கிறோம். நகரத்தில் எந்த அளவுக்கு மாணவர்கள் வேலை பெறுகிறார்களோ,அதே போல கிராமப் பகுதிகளிலும் மாணவர்கள் வேலை வாய்ப்பை பெற மேற்கொண்டு வருகிறோம். இந்த டைட்டில் பார்க்கில் வேலைவாய்ப்பு பெறுவது மட்டுமல்லாமல் இந்த பகுதியில் வளர்ச்சியும் ஏற்படும். தற்போது அரசு கல்லூரி முதல்வர் தன்னிடம் விளையாட்டு திடல் வேண்டும் என்று மனு அளித்தார் என்னுடைய சொந்தத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 15 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்கட்டமைப்பு வசதிகளுடன் அதற்கான பணிகள் துவங்கப்படும் என உறுதி அளித்தார். அரசு கல்லூரிக்கு ஆடிட்டோரியம் வேண்டுமென்று கேட்டுள்ளனர். டைட்டில் பார்க்கிற்கு,சிஎஸ்ஆர் நிதியிலிருந்து அமைச்சர் மதிவேந்தன் பெற்று தரவேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு கூறுவது போல் டைட்டில் பார்க் அமைவதால் கல்லூரிக்கு எந்த பாதிப்பும் இல்லை. கல்லூரிக்கும் டைட்டில் பார்க்கிற்கும் தனித்தனியாக சுற்றுச்சுவர் அமைக்கப்பட உள்ளது என பேசினார்...
Next Story