ஆந்திராவிற்கு லாரியில் கடத்த முயன்ற 37டன் ரேஷன் அரிசி பறிமுதல் 3பேரை கைது
ஆந்திராவிற்கு லாரியில் கடத்த முயன்ற 37 டன் ரேஷன் அரிசி பறிமுதல் 3 பேரை கைது செய்து 3 வாகனங்கள் பறிமுதல் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் அருகே ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறைக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் கண்காணித்த போது கிடங்கு அருகே லாரி ஒன்றில் 37 டன் ரேஷன் அரிசியை ஆந்திராவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. தொடர்ந்து 37 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து ஆந்திராவிற்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்ற சந்தோஷ் குமார், மாதவன் மற்றும் லாரி ஓட்டுநர் மணிகண்டன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். தொடர் விசாரணையில் செங்குன்றம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசியை பொது மக்களிடம் இருந்து பெற்று ஆந்திர மாநிலத்திற்கு கடத்துவதாக தெரிய வந்தது.
Next Story




