மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 370 மனுக்கள்

X
அரியலூர், பிப். 18- அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 370 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்துக்கு, ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து பெற்ற கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம் மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். : .
Next Story

