குழந்தைகள் கடத்தல் தொடர்பாக அதிகாரிகள் திடீர் ஆய்வு
குழந்தைகள் கடத்தல் தொடர்பாக அதிகாரிகள் திடீர் ஆய்வு
திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றி வந்த மருத்துவர் அனுராதா புரோக்கர்கள் மூலம் குழந்தைகளை விற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம்15ஆம் தேதி மருத்துவர் அனுராதா மற்றும் பெண் புரோக்கர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.தொடர்ந்து கடந்த 2023 அக்டோபர் மாதம் 16ஆம் தேதி நாலு கால் மண்டபம் அருகே இருந்த தமிழரசு மருத்துவமனையில் மருத்துவர் அனுராதா பயன்படுத்தி வந்த அறைகள் மற்றும் நாமக்கல் ரோட்டில் உள்ள அவருக்கு சொந்தமான சிகாமணி மருத்துவமனை ஆகியவை அரசு அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது. குழந்தை விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த மருத்துவர் அனுராதா கடந்த சில மாதங்களுக்கு முன் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் திலகம் தலைமையில் நிர்வாக அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட மருத்துவத்துறை அதிகாரிகள் திருச்செங்கோட்டில் சீல் வைக்கப்பட்ட மருத்துவர் அனுராதாவுக்கு சொந்தமான இடங்களில் சீலை அகற்றி உள்ளே இருந்த ஆவணங்களை ஆய்வு செய்தனர். இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் என்ன மேலும் எங்கெங்கு சோதனை நடத்தப்படுகிறது. என்ன தொடர் நடவடிக்கை என்பது குறித்து அதிகாரிகள் தகவல் தெரிவிக்க மறுத்து விட்டனர். ஆய்வு நடப்பது குறித்து தகவல் அறிந்து படம் எடுக்கச் சென்ற செய்தியாளர்களை மருத்துவரின் கணவர் புகைப்படம் எடுக்க கூடாது செய்திகள் எதுவும் எடுக்கக் கூடாது என தடுத்தார். மேலும் படம் எடுக்கச் சென்ற செய்தியாளர்களை அவர் தனது செல்போனில் படம் பிடித்தார் அவர் தனது செல்போனில் படம் பிடித்தார். அதிகாரிகள் தரப்பிலும் துறை ரீதியான விசாரணைக்கு வந்திருப்பதாகவும் அதிகாரிகளுடைய படமோ ஒளிப்பதிவு காட்சிகளோ வெளியிடப்படக் கூடாது என செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
Next Story