விருதுநகரில் மாநில அளவிலான நீச்சல் போட்டி 378 மாணவ, மாணவிகள் பங்கேற்பு...*

X
விருதுநகரில் மாநில அளவிலான நீச்சல் போட்டி 378 மாணவ, மாணவிகள் பங்கேற்பு... விருதுநகர் - அருப்புக் கோட்டை சாலையில் செந்திக்குமார நாடார் என்ற தனியார் கல்லூரியில் வைத்து 26வது மாநில அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றது. இந்த நீச்சல் போட்டியில் கலந்து கொள்ள சென்னை, தஞ்சாவூர், திருப்பூர், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, விருதுநகர்,நாமக்கல், தூத்துக்குடி, திருநெல்வேலி, நாமக்கல், கன்னியாகுமரி தென்காசி, கன்னியாகுமரி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரி மாணவ மாணவியர் வரை மொத்தம் 349 மாணவ, மனைவிகள் கலந்து கொண்டனர் இதில் கலந்து கொண்ட பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் , ஃப்ரீ ஸ்டைல் , பட்டர்ஃபிளை, பிரெஸ்ட் ஸ்ட்ரோக், பேக்ஸ்ட்ரோக், மெட்லே, உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன. 5 வயது முதல் 20 வயது வரை 9 பிரிவுகள் வயது வாரியா பிரிக்கப்பட்டு 100 வகையான போட்கள் நடைபெற்றன. நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பதக்கங்களும் அதற்கான சான்றிதழ்களையும் கல்லூரி நிர்வாகம் சார்பாக வழங்கினார்கள் மேலும் இந்த போட்டிக்கான ஏற்பாட்டினை கல்லூரியின் உடற்கல்வித்துறை தலைவர் செல்வக்குமார், யாஹ லட்சுமி, சம்பத்குமார், ராம்குமார்,ரேவதி, ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்
Next Story

