திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 379 மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி வழங்கிய எம்எல்ஏ

திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 379 மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி வழங்கிய எம்எல்ஏ
X
திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 379 மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி வழங்கிய எம்எல்ஏ
திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தனது சொந்த செலவில் திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 13அரசு பள்ளிகளைசேர்ந்த 125 பேர்,ஒன்பது அரசு உதவி பெறும் பள்ளிகளைசேர்ந்த 28 பேர் 28தனியார் பள்ளிகளைசேர்ந்த 226 பேர் என 50 பள்ளிகளைச் சேர்ந்த379 மாணவ மாணவிகளுக்கு 10 11 மற்றும் 12 ஆம் வகுப்பு 2024 25 ஆம் ஆண்டுக்கான தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த சாதனை மாணவர்களுக்கு சான்றுகள் மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி சண்முகா நிறுவன வளாகத்தில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் தலைமை வகித்தார்.நாமக்கல் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் மாதேஸ்வரன்,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் ராயல் செந்தில் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர் களாக நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பரமத்தி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் மூர்த்தி,பி ஆர் டி நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனர் பரந்தாமன், திருச்செங்கோடு மேற்கு நகர திமுக பொறுப்பாளர் முன்னாள் நகர் மன்ற தலைவர் நடேசன்,கிழக்கு நகர திமுக பொறுப்பாளர் நகர் மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன் ஒன்றிய திமுக செயலாளர்கள் திருச்செங்கோடு வடக்கு வட்டூர் தங்கவேல்,தெற்கு தாமரைச்செல்வன் எலச்சிபாளையம் செல்வராஜ், மல்ல சமுத்திரம் பழனிவேல் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட இணைச் செயலாளர் மயில் ஈஸ்வரன், தீரன் தொழிற்சங்க பேரவை மாவட்ட செயலாளர் கொங்கு கோமகன் சண்முகா பொறியியல் கல்லூரி முதல்வர் பழனிச்சாமி,எஸ் கே வி கல்வி நிறுவனங்களின் தாளாளர் கோல்டன் ஹார்ஸ் ரவி, ரங்கா கல்வி நிறுவன தாளாளர்சக்திவேல்,கவிதாஸ் கல்வி நிறுவனங்களின் தாளாளர் டாக்டர் பி செந்தில்குமார் ஆகியோர் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களின் தாளாளர்கள் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கல்லூரி முதல்வர்கள் மாணவ மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறியதாவது ஒரு மாத காலமாக தங்களது முழு உழைப்பையும் செலுத்தி இந்த நிகழ்ச்சி வெற்றி பெற காரணமாக இருந்த ஆசிரியர்கள்அதிகாரிகள் இடம் கொடுத்து உணவளித்த சண்முகா கல்வி நிறுவனங்களின் தாளாளர் சண்முகம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் கேட்டு உதவுபவர்கள் சிலர் இருக்கிறார்கள் கேட்டால்தான் உதவுபவர்கள் சிலர் இருக்கிறார்கள் ஆனால் தாமாக முன்வந்து உதவியால் தான் இந்த விழா சிறப்புர நடந்து கொண்டிருக்கிறது சாதனை படைத்து பரிசுகள் பெற வருகை தந்திருக்கும் மாணவர்கள் நன்றி மறந்தவர்களாக இருக்கக்கூடாது தாய் தந்தையர் ஆசிரியர்கள் தெய்வமாக மதிக்கப்பட வேண்டியவர்கள் எந்நாளும் அவர்களது உழைப்பையும்தியாகத்தையும் மறந்து விடக்கூடாது மருத்துவர் கொடுக்கும் மருந்துகசக்கத்தான் செய்யும் உடம்பு சுகமாக வேண்டும் என்றால் கசப்பான மருந்தை சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால் பெற்றோர்கள் ஆசிரியர்கள் சொல்கிற அறிவுரைகள் கசக்க செய்தாலும் நம் எதிர்காலத்தை வளமானதாக ஆக்கும் என்பதை மறந்து விடக்கூடாது உயர்கல்வி படிக்க நினைக்கும் போது உடன்படித்தவர்கள் தேர்வு செய்யும் கல்லூரியில் தேர்வு செய்ய வேண்டுமென முடிவு செய்யக்கூடாது நீங்கள் படிக்கும் இந்த மூன்றாண்டு கால கல்விதான் உங்கள் வாழ்க்கையை சரியாக அமைத்துக் கொள்ள உதவும் கல்விதான் அளிக்க முடியாத சொத்து நம்மை முன்னேற்றம் படிப்பு இல்லை என்றால் யாரும் முன்னேற முடியாது படிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எல்லாவற்றிலும் நன்மையும் உண்டு தீமையும் உண்டு அதில் நன்மையை மட்டும் எடுத்துக் கொள்ள நாம் பழக வேண்டும் இந்த வயதில் தவறுகள் செய்தால் அடுத்த 50 ஆண்டுகளுக்கு அதற்கான பாதிப்பை நாம் அனுபவிக்க வேண்டி இருக்கும் இந்தப் படிப்பு தான் படிக்க வேண்டும் என ஆசைப்படுவதில் தவறில்லை ஆனால் அது கிடைக்காவிட்டால் நமக்கு கிடைத்ததில் எப்படி முன்னேற வேண்டும் அதனை எப்படி விரும்பிப் படிக்க வேண்டும் என மாணவர்கள் முயற்சி செய்ய வேண்டும் ஆசைப்பட்டது கிடைக்கவில்லை என்றால் கிடைத்ததை ஆசை கூறியதாக ஆக்கிக் கொள்ள பழக வேண்டும் ஐஏஎஸ் தேர்வு எழுதி தோற்றுப் போய் ஐஏஎஸ் கனவு இனிமேல் நிறைவேறாது என்ற நிலையிலிருந்து ஒருவர்தான் ஐஏஎஸ் அகாடமி தொடங்கி இன்று ஆயிரக்கணக்கான20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளை உருவாக்கி இருக்கிறார் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்வாழ்க்கையை மகிழ்வாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான் படிக்கிறோம் எதை வேண்டுமானாலும் படிக்கலாம் ஆனால் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் யூபிஎஸ்சி தேர்வுகளை படிக்க வேண்டும் என்பதை ஒரு லட்சியமாக கொண்டு படியுங்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியராக இன்று பொறுப்பேற்று இருக்கிற துர்கா தேவி திருமணத்திற்கு பிறகு படித்து தான் மாவட்ட ஆட்சியர் ஆகியிருக்கிறார் அவரை ஒரு முன்னுதாரணமாக கொள்ளுங்கள் எப்பொழுதும் படித்துக் கொண்டே இருந்தால் முயற்சி செய்து கொண்டே இருந்தால் நம் உழைப்புக்கான வெற்றி நம்மை தேடி வரும் யாரையும் ஏமாற்ற நினைக்காதீர்கள் நீங்களும் ஏமாந்து போகாதீர்கள் லஞ்சம் வாங்க கூடாது நேர்மையாக இருந்தால் கெட்டுப் போக மாட்டோம் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் நேர்மையாக வாழப் பழக வேண்டும் இன்றைய காலகட்டத்தில் இளைய சமூகத்திற்கு இருக்கிற ஒரே பெரிய வியாதி தயக்கம் தான் தயக்கம் இருந்தால் வாழ்க்கையில் முன்னேற முடியாது நிலவுக்குச் சென்றஆற்றின் ஒரு நிமிடம் தயக்கம் காட்டியதால் தான் ஆர்ம்ஸ்ட்ராங் இன்றைக்கு நிலவில் இறங்கிய முதல் மனிதனாக போற்றப்படுகிறார் எனவே எக்காரணத்தைக் கொண்டும் தயக்கத்தை விட்டு வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இந்த ஆண்டு மல்ல சமுத்திரம் பகுதியில் புதிதாக ஐடிஐதொடங்கப்பட உள்ளது மாணவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் நீங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து வெற்றிகளைப் பெற்று சிறப்பான நிலைக்கு வர வேண்டும் என வாழ்த்துகிறேன் எனக் கூறினார்.10 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் அந்தந்த பள்ளிகளில் முதல் இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் கேடயம் மற்றும் ரொக்க பரிசாக ரூ ஐந்தாயிரம் இதே போல் இரண்டாம் இடம் பிடித்தவர் களுக்குசான்றிதழ் கேடயம் ரொக்கப் பரிசு 3000 மூன்றாம் இடம் பிடித்தவர்களுக்குசான்றிதழ் கேடயம் ரொக்கப் பரிசாக 2 ஆயிரம் என379 மாணவ மாணவிகளுக்கு சுமார் 13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரொக்க பரிசுகள் வழங்கப் பட்டது.தனியார் கல்வி நிறுவனங்கள் வழங்கிய ஆயிரம் மதிப்புள்ள நோட்டு புத்தகங்கள் பைகள் பேனா உள்ளிட்ட பரிசு பொருள்களும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.
Next Story