உலகத் தாய்ப்பால் வார விழா தாய்ப்பால் விழிப்புணர்வு மற்றும் சமுதாய வளைகாப்பு விழா

நாமக்கல் இந்திய மருத்துவ சங்கம் பெண்கள் மருத்துவப் பிரிவு இன்னர்வீல் சங்கம் ரோட்டரி சங்கம் மகப்பேறு மருத்துவ பிரிவு இணைந்து நடத்திய உலக தாய்ப்பால் வார விழா தாய்ப்பால் விழிப்புணர்வு மற்றும் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
நாமக்கல்லில் மோகனூர் ரோட்டில் உள்ள ரோட்டரி கிளப் வளாகத்தில் இன்று உலக தாய்ப்பால் வார விழாவை ஒட்டி தாய்ப்பால் விழிப்புணர்வு மற்றும் சமுதாய வளைகாப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழாவை நடத்தி அழகுபடுத்தினார்கள். மேலும் அங்கு வந்திருந்த கர்ப்பிணி பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குழந்தைகளுக்கு ஒன்றரை வருடம் வரை தாய்ப்பாலை தவறாமல் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். மேலும் விழாவில் முதல் முறையாக கருவுற்ற கர்ப்பிணிப் பெண்களும் இரண்டாவது முறையாக கருவுற்ற கர்ப்பிணி பெண்களும் கலந்துகொண்டு மதியம் உணவாக கலவை சாதத்தை உண்டு விழாவை நிறைவு செய்தார்கள். டாக்டர் மல்லிகா குழந்தைவேல் நாமக்கல் இந்திய மருத்துவ சங்கத்தின் பெண்கள் பிரிவின் தலைவி மற்றும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மருத்துவர் க.பூங்கொடி சுகாதார சேவை துணை இயக்குனர் நாமக்கல் மேலும் பல முக்கிய பிரமுகர் மருத்துவர்கள் ரோட்டரி சங்கத் தலைவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.
Next Story