காங்கேயத்தில் காரும் மது பாட்டில்கள் ஏற்றி வந்த வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து ஒருவர் பலி ஐந்து பேர் படுகாயம் ரூ 38 லட்சம் மதிப்பிலான சரக்குகள் சாலையில் சிதறியது

வீரணம்பாளையத்தில் காரும் டாஸ்மாக் மது பாட்டில்கள் ஏற்றி வந்த வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து.1 வர் பலி.5 பேர் படுகாயம் மேல் சிகிச்சைக்குஅனுமதி. வேனில் கொண்டு வந்த ரூ.38 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் சாலையில் சிதறியது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வீரணம் பாளையம் அருகே உள்ள பகவதி பாளையத்தில் மதுபான கிடங்கு உள்ளது. இந்த மதுபான கிடங்கில் இருந்து ஈச்சர் வேன் வாகனம் மூலமாக ஓட்டுநர் மற்றும் 3 உதவியாளர்களை ஏற்றிக்கொண்டு காங்கேயம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மது பாட்டில்களை இறக்குவதற்கு வந்த வேன் வீரணம் பாளையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே ஊத்துக்குளியில் இருந்து வெள்ளகோவில் நோக்கி வந்த கார் மதுபான பாட்டில் ஏற்றி வந்த வாகனத்தில் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மது பாட்டில் ஏற்றி வந்த வேன் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது . இதில் மதுபான பாட்டில்கள் சாலையில் சிதறியது. இதில் பல பாட்டில்கள் உடைந்தது . மேலும் காரில் வந்த இருவர்கள் காரின்  இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். பின்னர் காங்கேயம் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து காரில் மாட்டிக்கொண்டவர்களை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் காரை ஓட்டி வந்த நசீம் என்ற உத்தரபிரதேசத்தை சேர்ந்த நபர் உயிரிழந்தார். அவருடன் முகமது பர்மா படுகாயமடைந்து மேல் சிகிச்சைக்கு கோவை தனியார் மருத்துவமனைக்கும் , வேன் ஓட்டுநர் சோமு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஈரோடு தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் மதுபானங்களை ஏற்றி வந்த வேனில் வந்த 3 பேர் காயமடைந்துள்ளனர். பகவதிபாளையம் மதுபான கிடங்கில் இருந்து சுமார் ரூ 38 லட்சம் ரூபாய் மதிப்பிலான பீர், பிராந்தி, விஸ்கி, போன்ற மது பாட்டில்களை ஏற்றி வந்த நிலையில் தற்போது உடைந்த பாட்டில்களின் மதிப்பு சுமார் ரூ.10 லட்சத்திற்கு மேல் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் இதன் மதிப்பை தெரிவிக்க மறுக்கின்றனர். மேலும் விபத்து நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் வெளியிட மறுக்கின்றனர் . கடந்த சில நாட்களுக்கு முன்புதான் தமிழக அரசு ரூ.30 ஆயிரத்து 400கோடி மதிப்பிலான மது பாட்டில்களுக்கு இன்சூரன்ஸ் செய்திருந்தது என்று பல்வேறு செய்தி தொலைக்காட்சிகள் மற்றும் செய்தித்தாள்களில் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இன்று நடந்த விபத்து பல்வேறு கோணத்தில் சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது.
Next Story