திருச்செங்கோட்டில் மறைந்த முன்னாள் முதல்வர்,அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் எம்ஜிஆரின் 38 வது நினைவு தினத்தை ஒட்டிநகர அதிமுக சார்பில்மௌன ஊர்வலம்

திருச்செங்கோட்டில் மறைந்த முன்னாள் முதல்வர்,அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் எம்ஜிஆரின் 38 வது நினைவு தினத்தை ஒட்டிநகர அதிமுக சார்பில் 500-க்கும் மேற்பட்டோர் அமைதி ஊர்வலம்எம்ஜிஆர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகர அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனர் மாண எம்ஜிஆரின் 38 வது நினைவு தினத்தை ஒட்டி அதிமுக நகரக் கழக செயலாளரும் நகர் மன்ற உறுப்பினருமான அங்கமுத்து ஏற்பாட்டில் திருச்செங்கோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன் சரஸ்வதி தலைமையில் அதிமுகவினர் 200க்கும் மேற்பட்டோர் திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே இருந்து அமைதி பேரணியாக நகரின் முக்கிய வீதிகளான நான்கு ரத வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே அலங்கரித்து வைக்கப் பட்டிருந்த எம் ஜி ஆரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து சுமார் 200க்கும் மேற்பட்ட அதிமுகவினர் எம்ஜிஆரின் திரு உருவப்படத்திற்கு முன்பு நின்று 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும், மீண்டும் எடப்பாடியார் தலைமையில் அதிமுகவின் ஆட்சி அமைய அனைவரும் பாடுபட வேண்டும், திமுகவின் சட்ட விரோத ஆட்சி பற்றி மக்கள் மத்தியில் எடுத்து கூற வேண்டும் எனவும் மீண்டும் தமிழகத்தின் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வரஅனைவரும் உழைக்க வேண்டும்என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து சாணார்பாளையம் பகுதியில் உள்ள எம்ஜிஆரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகர், வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ் ஆர் எம் டி சந்திரசேகர், தெற்கு ஒன்றிய செயலாளர் அணிமூர் மோகன்,முன்னாள்மாவட்டஊராட்சிக் குழு உறுப்பினர் செல்லப்பன், மாவட்டத் துணைச் செயலாளர் இரா முருகேசன், நகர மகளிர் அணி செயலாளர் கலைமணி, நகர அம்மா பேரவை செயலாளரும் நகர்மன்ற உறுப்பினருமான கார்த்திகேயன் மற்றும் அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் நகர ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
Next Story